2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

Galaxy Note 7க்கு கட்டுநாயக்கவிலும் தடை

Gavitha   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்சங் Galaxy Note 7 அலைபேசிகளை விமானங்களில் பயன்படுத்துவதற்கு அல்லது சார்ஜ் செய்வதற்கு முற்றிலும் தடை விதிப்பதாக முன்னணி விமான சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், Galaxy Note 7 அலைப்பேசி தொடர்பில்  கட்டுநாயக்க சர்வதேச  விமான விமான நிலையத்திலும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை அலைபேசிகள் சார்ஜ் செய்யப்படும் போது வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததை   தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த ரக அலைபேசிகள் பயன்பாட்டையும் சார்ஜ் செய்தலையும் தவிர்த்துக் கொள்ளுமாறு குறித்த விமான சேவை வழங்குநர்கள் அறிவித்தல்விடுத்துள்ளன.   
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் இவ்வாறான பொது அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன், விமான நிலையத்தில் அந்த அறிவித்தலை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மேலும் விமான நிலையங்களில் பயணிகள் பிரவேசிக்கும் போது அது தொடர்பில் அறிவுறுத்தல்களையும் வழங்குகின்றன.   
அவுஸ்திரேலியாவின் குவான்டாஸ், ஜெட்ஸ்டார் மற்றும் வேர்ஜின் விமான சேவைகளும், சீனா எயார்லைன்ஸ் மற்றும் EVA எயார்வேய்ஸ் ஆகியனவும் தமது பயணிகளுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.   
இந்த வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து சம்சங் நிறுவனம், Note 7 அலைபேசிகளை மீளப்பெறுவதாக அறிவித்திருந்ததுடன், குறித்த பற்றரிகளுக்கு பதிலாக புதிய பற்றரிகள் பதிக்கப்பட்டு இந்த தொலைபேசிகள் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.   

இந்த செயற்பாட்டின் காரணமாக சம்சங் நிறுவனத்துக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என ப்ளூம்பேர்க் மதிப்பிட்டுள்ளது. இது நிறுவனத்தின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் தேறிய வருமானத்தின் 5 சதவீதத்துக்கும் குறைவான பெறுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X