2025 ஜூலை 26, சனிக்கிழமை

Huawei P10 மற்றும் P10 Plus திறன்பேசிகள் அறிமுகம்

Administrator   / 2017 மார்ச் 08 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

Leica உடன் இணை பொறியமைப்புச் செய்யப்பட்ட, புதிய HUAWEI P10 மற்றும் P10+ ஆகிய புத்தாக்கம்மிக்க மற்றும் நவீன வடிவமைப்பிலான திறன்பேசிகளை HUAWEI அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வர்ணங்களைப் பொறுத்தவரையில் உலகில் மிகச் சிறந்த சிந்தனைச் சிற்பியாகத் திகழ்ந்துவருகின்ற Pantone Color Institute TM உடனான விசேட பங்குடமையின் மூலமாக, அதி நவீன வர்ணங்களுடன் இச்சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் தனித்துவமான, வைர வெட்டுக்களைப் போன்ற முடிவு வேலைப்பாடுகளைக் கொண்டவையாக விசேட வடிவமைப்பைக் கொண்டுள்ளன. Huawei Super Charge தொழில்நுட்பம் அடங்கலாக, நவீன தொழில்நுட்பவியல் புத்தாக்கங்களுடன் வெளிவந்துள்ள HUAWEI P10 மற்றும் P10+ ஆகியன தற்போது சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற புகைப்படவியல் தொடர்பில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட திறன்பேசிகளாகக் காணப்படுகின்றன.  

HUAWEI P10 மற்றும் P10+ ஆகியன திறன்பேசிகளில் முதல்முறையாக Leica இரட்டை பின்புற கமெராவுக்குப் புறம்பாக Leica முன்புற கமராவையும் கொண்டவையாக அறிமுகமாகியுள்ளன. Huawei இன் தனித்துவம் வாய்ந்த புகைப்படவியல் சிறப்புடன் நவீன, தத்ரூபமான உருவப்படங்களைத் தோற்றுவிப்பதற்கு உலகிலேயே நவீன புகைப்படவியல் தொழில்நுட்பத்தை அவை உபயோகிக்கின்றன. HUAWEI P10 மற்றும் P10+ ஆகியன அனைத்து தொழில்நுட்ப சாதனங்களையும் இணைத்து, ஒரு கலைநயம் வாய்ந்த ஸ்டூடியோவாக உங்களது சட்டைப்பையில் வைத்துப் பேணுவதற்கு வழிகோலியுள்ளன. ஸ்டூடியோவை ஒத்த, மீள் ஒளியூட்டலுடன், முப்பரிமாண (3D) முறையில் முகத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளமையால், எந்த சூழலிலும் அழகிய புகைப்படங்களை வசப்படுத்திக்கொள்ள உங்களால் முடிகின்றது.  

புதிய முன்புற கமராவின் துணையுடன், Leica புகைப்படப் பாணியில் உருவத்தை நேர்த்தியாகப் புகைப்படம் பிடித்துக்கொள்ள முடிவதுடன், வியத்தகு அளவில் முக பாவங்களை துல்லியமாக வசப்படுத்தும் பின்புற கமெரா, உங்களுடைய புகைப்படங்களுக்கு உயிரோட்டம் அளிக்கின்றன. உங்களுடைய கமெராவின் வில்லைகள் எத்திசை நோக்கியிருப்பினும், நீங்கள் எடுக்கும் அனைத்து புகைப்படங்களிலும் உருவப்படங்களை உள்ளடக்க முடிவதுடன், தொழில்ரீதியான ஒளியூட்டல் விளைவுகள், எந்த சூழலிலும் உங்களுடைய படத்தை தனித்துவமாக காண்பிக்கின்றன. Huaweiஇன் கலப்பு முறை விம்ப உருப் பெரிதாக்கம் (Hybrid Zoom), புகைப்படத்தின் தரத்தை தொடர்ந்தும் பேணியவாறு, படம் ஒன்றின் குறிப்பிட்ட பகுதிகளை இலக்கு வைப்பதற்கு பாவனையாளர்களுக்கு இடமளிக்கின்ற ஒரு விசேட தொழில்நுட்ப அம்சமாகக் காணப்படுகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X