Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 03 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பெருமளவில் விற்பனையாகி வருகின்ற திறன்பேசி வர்த்தக நாமங்கள் வரிசையில், முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei, உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ள Huawei P20 Pro திறன்பேசிகளை இலங்கையிலும் கொழும்பு, ஷங்கரிலா கொட்டலில் நடைபெற்ற வைபவத்தில் வெளியிட்டு வைத்தது.
உலகில் மூன்று கமெராக்களைக் கொண்ட முதலாவது திறன்பேசியாக Huawei P20 Pro திகழ்வதுடன் அதன் மூன்று கமெராத் தொகுதியில் அதிநவீன செயற்கை புலனாய்வுத் தொழில்நுட்பம் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அறிமுகமாகின்ற முதலாவது திறன்பேசியாக Huawei P20 Pro அமைந்துள்ளது.
அலைபேசி புகைப்படவியலில் புதுமையைப் புகுத்தி, உலகில் முதலாவது Leica பின்புற மூன்று கமெராவை Huawei P20 Pro கொண்டுள்ளதுடன் செயற்கைப் புலனாய்வுடனான நவீன தொழில்நுட்பத்தையும் கலைவண்ணத்தையும் கொண்டுள்ளது. Huawei P20 Pro இன் பயன்பாட்டின்போது, தொழில்சார் ரீதியான படங்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
பின்புறக் கமெராத் தொகுதி,40MP RGB sensor, 20Mp monochrome sensor மற்றும் telephoto lens கொண்ட ஒரு 8MP sensorஆகியவற்றைக் கொண்டுள்ளது. Huawei P20 Pro ஆனது செயற்கைப் புலனாய்வு ஒப்பனை மற்றும் 3D portrait lighting ஆகியவற்றுடன் 24MP செல்பி கமெராவைக் கொண்டுள்ளதுடன், சரும லட்சணத்தைச் சீர்செய்தல், கவர்ச்சிகரமான முகத்தோற்றம் மற்றும் யதார்த்தமான 3D அம்சமேம்பாடுகளுடன் அழகிய செல்பி படங்களையும் எடுக்க உதவுகிறது.
இந்நிகழ்வில்,Huawei Divice Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி பீற்றர் லியு கருத்துத்தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மாற்றியமைக்கும் புத்தாக்கத்தை தொடர்ந்தும் வழங்குவதில் Huawei கவனம் செலுத்தியுள்ளது. உலகில் முதலாவது மூன்று கமெராக்களுடன் வெளிவந்துள்ள Huawei P20 Pro எமது பிரதான உற்பத்தி வரிசையில் தனித்துவமானது.
வாடிக்கையாளர்களின் தனித்துவமான விருப்பு வெறுப்புகள், மாற்றமடைந்து வருகின்ற தேவைகளைத் தொடர்ச்சியாக ஈடுசெய்கின்ற ஓர் வர்த்தக நாமமாக, Huawei இனை நிலைநிறுத்தும் வகையில் சந்தையில் எமது வழங்கல்களை இந்த அறிமுகம் மேலும் வளம்படுத்த உதவும்” என்றார்.
சிங்கர் ஸ்ரீ லங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் இங்கு உரையாற்றுகையில், “நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைச் சந்தைப்படுத்துவதில் இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் உள்ள நிறுவனமாக சிங்கர் திகழ்ந்து வருவதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த உற்பத்திகளை வழங்கி வருகின்றோம். இன்று நாம் அறிமுகப்படுத்துகின்ற Huawei P20 Pro உற்பத்தியும் அவற்றுள் ஒன்றாகும். 2012ஆம் ஆண்டு முதல் Huawei இன் பிரத்தியேக விநியோகஸ்தராக நாம் செயற்பட்டு வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
இந்தத் திறன்பேசியில் 6.1” OLED Display ஆனது நம்ப முடியாத அளவில் அழகிய வர்ணங்களை வௌிக்கொணர்வதுடன் 18.7:9 என்ற Aspect Ratio உடன் Huawei இன் Full View Display இன் பலனாக ஈடுஇணையற்ற, உன்னதமான அனுபவத்தைத் தருகிறது.
Huawei P20 Pro ஆனது 6GB ROM மற்றும் 108GB ROM அளவுடனான Internal storage மற்றும் 4,000mAh batttery ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் மற்றும் ஆகிய முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களையும் இப்புதிய உற்பத்தி வடிவம் உள்ளடக்கியுள்ளது. Huawei P20 Pro ஆனது ரூபாய் 139,900 என்ற விலையில் தற்போது கிடைக்கப்பெறுகிறது.
படப்பிடிப்பு: வருண வன்னியாராட்சி
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago