2025 ஜூலை 23, புதன்கிழமை

Huawei ஏற்பாட்டில் தொழில்நுட்ப சேவை தினங்கள்

Editorial   / 2018 ஜனவரி 18 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் மூன்று மாத காலப்பகுதியில் பிரத்தியேகமான தொழில்நுட்ப சேவை தினங்களை Huawei ஏற்பாடு செய்திருந்தது.

Huawei வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட இந்தத் தொழில்நுட்ப சேவை தினங்களில் அவர்கள் தமது திறன்பேசி பேணற்சேவை தேவைகள் அனைத்தையும் அருகாமையிலுள்ள மையங்களுக்கு சென்று நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.   

பம்பலப்பிட்டி, கண்டி, காலி, மாத்தறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியவாறு நாடெங்கிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 8 பேணற்சேவை மையங்களை Huawei இயக்கி வருகின்றது.

பெறுமதிமிக்க அனைத்து Huawei வாடிக்கையாளர்களுக்கும், மற்றும் கொள்வனவாளர்களாக மாறும் வாய்ப்பைக் கொண்டுள்ளவர்களுக்கும் அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்யும் இலக்குடன் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இந்தச் சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

Huawei தொழில்நுட்ப சேவை தினமானது 2017 இறுதிக் காலாண்டில் பம்பலப்பிட்டி பிரதான பேணற்சேவை மையத்திலும், அனுராதபுரம் மற்றும் கண்டி பேணற்சேவை மையங்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

2018 ஜனவரி முதல் Huawei தொழில்நுட்ப சேவை தினமானது மாதத்தில் ஒரு தடவை வேறுபட்ட இடங்களில் முன்னெடுக்கப்படுவதுடன், பேணற்சேவைகளை நாடுகின்ற மற்றும் Huawei உற்பத்திகள் தொடர்பில் புதிய தகவல் விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகின்ற விசுவாசம்மிக்க வாடிக்கையாளர்களுடன் இடைத்தொடர்பாடல்களை பேணுகிறது. ஒட்டுமொத்த பேணற்சேவை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட Huawei திறன்பேசி உற்பத்தி வடிவங்களுக்கு கெட்டி கண்ணாடியை (tempered glass) இலவசமாக வழங்குதல், தொலைபேசி சாதனத்தின் வெளிப்புற சுத்தப்படுத்தல் சேவைகள், தொழிலாளர் கட்டணமின்றிய மென்பொருள் மேம்பாடுகள், இலவச வன்பொருள் திருத்த வேலைகள் மற்றும் இலவச FRP unlocking சேவைகள் போன்ற ஏனைய இலவச சலுகைகள் மீதும் விசேடமாக Huawei தொழில்நுட்ப சேவை தினம் கவனம் செலுத்தியுள்ளது.   

ஸ்மார்ட்போன் மற்றும் tablet சாதனங்களின் திருத்த வேலைகள், பேணற்சேவை மற்றும் உத்தரவாத சேவைகள் போன்ற அனைத்து சேவைகளையும், பல்வேறுபட்ட உற்பத்திகளிலிருந்து Huawei வர்த்தகநாமமிடப்பட்ட துணைசாதனங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பையும் இந்த மையங்கள் வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் சேவைகளாக வழங்குகின்றன. இதுவரை நிறைவுசெய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப சேவை தினங்களின் போது அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டிழுப்பு மூலமாக Huawei வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளாக அன்பளிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Huawei தலைமை அலுவலகத்தின் விரிவான பயிற்சி மற்றும் நேரடி வழிகாட்டலின் கீழ் தேர்ச்சி பெற்ற மற்றும் தகைமை வாய்ந்த பணியாளர்களின் மிகச் சிறந்த சேவை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .