2025 ஜூலை 16, புதன்கிழமை

IBSL புதிர் போட்டியில் BOC வெற்றி

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

IBSL ஏற்பாடு செய்திருந்த வங்கிகளுக்கிடையிலான புதிர் போட்டியில், இலங்கை வங்கி அணி மூன்றாவது தடவையாகவும் வெற்றியீட்டியிருந்தது.

இந்தப் புதிர் போட்டியின் பிரதம அதிதியாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பதில் ஆளுநர் கலாநிதி டபிள்யு. ஏ. விஜேவர்தன கலந்து கொண்டார்.

வெற்றியீட்டிய இலங்கை வங்கியில் பிரமோத் டி சில்வா (அணித்தலைவர்), கவிந்து பெரேரா, சத்துர அதுகோரல,  சுபுன் லியனகே ஆகியோர் அடங்கியிருந்தனர். இந்த நான்கு பேரைக் கொண்ட அணி, முதல் தடவையாக மூன்று ஆண்டுகளிலும் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IBSL புதிர் போட்டி வருடாந்த நிகழ்வாக அமைந்துள்ளதுடன், IBSL இன் நாள்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தப் போட்டிகளில் நாட்டின் வங்கிகள், நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தமது திறமைகளை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டும் சுமார் 20 அணிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X