2025 ஜூலை 26, சனிக்கிழமை

ICTAஇன் முகாமைத்துவப் பணிப்பாளராக முகுந்தன் கனகே நியமனம்

Gavitha   / 2017 மார்ச் 14 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தகவல்  மற்றும் தொடர்பால் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) முகுந்தன் கனகேயை இரண்டாவது தடவையாகவும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி /முகாமைத்துவப் பணிப்பாளராக நியமித்துள்ளது.

 புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ICTA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி /முகாமைத்துவப் பணிப்பாளராக, பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார் முகுந்தன். ‘Digital Sri Lanka’ வினை மறுசீரமைத்தல், அதனைக் கட்டமைத்தல், மற்றும் செயற்படுத்தல் போன்ற பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. டிஜிட்டல் பொருளாதாரத்தினை கட்டியெழும்பும் வகையிலான கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக இந்நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது  

நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கலுக்கான மிக உயர்ந்த அமைப்பாக தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்ப முகவரகம் 2003 ஆம் ஆண்டில் உலக வங்கியின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. தற்போது அது, பிரதமரின் அலுவலகத்தினால் 2017 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 15 பில்லியன் பெறுமதியான பணச் செலவீனத்தினை இலக்காகக் கொண்டு மீள கட்டமைக்கப்படுகின்றது.

தொலைத் தொடர்பாடல்  மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, திரு கனகேயின் நியமனம் குறித்து கருத்துக் கூறுகையில், அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியேருடன் கலந்துரையாடப்பட்டு, அவரது சம்மதத்துடன், ICTA யின் பணிப்பாளர் சபைக்கு,  முகுந்தன் முகாமைத்துவப் பணிப்பாளர் , பிரதம நிறைவேற்றதிகாரியாக மீள நியமிக்கப்பட்டார்.

இலங்கையை டிஜிட்டல் எதிர்காலத்தினை  நோக்கி நகர்த்தும் வகையில் பாரிய அளவிலான திட்டங்களை வடிவமைப்பதனை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம், கையாளும். டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தினை நோக்கி வழிநடத்தவும் அரசினுள்ளும் அதற்கு வெளியிலும், சிறந்த வினைத்திறன், மற்றும் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும் ICTA  முகவரகமானது, 80 க்கும் மேற்பட்ட திட்டங்களைத் திட்டமிட்டு முன்னெடுக்கவுள்ளது. எதிர்கால இலங்கையானது 'கற்பனை' யுகத்தின் அடிப்படையிலேயே அமையும் என்பதனால், புத்தாக்க செயற்பாடுகள், ஆக்கத்திறன், உற்பத்தித்திறன் என்பனவற்றை சமூகத்தில் மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் தொடக்கச் சூழலொன்றிiனைக் கட்டியெழுப்பி அதற்காதரவாகச் செயற்படுகின்றது.

தனது 12 ஆவது வயது முதல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் கனகே, 16 வது வயதில் தனது சொந்தக் கம்பனியை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து வெற்றிகரமான பல தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவினார். இவற்றுள் இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் செய்மதித் தொழில்நுட்பத்தில் இணைக்கும் ஊடக நிலையமொன்றினையும் அவர் உருவாக்கினார். கனகே நிதியியல் மற்றும் வியாபார முகாமைத்துவத்தில்  ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பதோடு  ஐக்கியராச்சியத்தின் கெலி பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் தொழில்நுட்ப முதுமாணிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X