2025 மே 20, செவ்வாய்க்கிழமை

INSEE கொங்கிறீற் சீமெந்து அறிமுகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய றெடி மிக்ஸ் முறைக்கு மேற்பட்ட புத்தாக்கமான தீர்வுகளை வழங்க INSEE சீமெந்து முன்வந்துள்ளது.

INSEE கொங்கிறீற் பொது முகாமையாளர் நந்தன அமுனுதுடுவ, இது பற்றி விளக்கமளிக்கையில், “நிலைபேறான அபிவிருத்தி செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு, பெருமளவான நிறுவனங்கள் பின்பற்றும் முறையான ‘பின் ஒருங்கிணைப்புக்கு’ மாறாக ‘முன் ஒருங்கிணைப்பு’ முறைமையை பின்பற்றும் ஒரே சீமெந்து உற்பத்தியாளராக விளங்குவதே INSEE கொங்கிறீற் நிறுவனத்தின் சிறப்புத்தன்மையாகும். அதாவது, அத்தியாவசிய தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய தயாரிப்புகளை மாத்திரம் வழங்காமல், பயன்பாட்டிற்கேற்ப பரந்தளவு தீர்வுகள் அடிப்படையிலான கொங்கிறீற் கலவைகளை நாம் வழங்குகின்றோம். நாம் வழங்கும் தீர்வுகளின் மூலம் கட்டடம் நிர்மாணிப்போர் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் வெவ்வேறு பிரயோக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.  

INSEE சீமெந்து நிறுவனத்தின் கொங்கிறீற் பிரிவான INSEE கொங்கிறீற் ஊடாக, கொழும்பு நகரின் துரித அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவசியமான சிறந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் கூடிய கொங்கிறீற் மற்றும் சீமெந்து தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

பாரம்பரிய றெடி மிக்ஸ் வகைகளையும் தாண்டி புத்தாக்கமான தீர்வுகளாக இவை அமைந்துள்ளதுடன், தேசத்துக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவதும் சூழலுக்கும் பாதுகாப்பானதாக அவை அமைவதும் குறிப்பிடத்தக்கது.   

INSEE றெடி மிக்ஸ் சீமெந்து, பேலியகொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நவீன வசதிகள் படைத்த உற்பத்தி பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றது. சூழலுக்கு நட்பான, பூஜ்ஜிய கழிவுகள் அகற்றல் வசதிகளை கொண்ட நிலையமாக இது அமைந்துள்ளதுடன், பயன்பாட்டு திரட்டுகளையும் நீரையும் மீளப் பயன்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

INSEE கொங்கிறீற்றின் பரந்த தெரிவுகளின் மூலம் ஆறு றெடி மிக்ஸ் சீமெந்து தீர்வு தெரிவுகள் வழங்கப்படுவதுடன், நிர்மாணத் துறையின் சகல பிரிவுகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக இது அமைந்துள்ளது.

மற்றுமொரு அம்சமாய், INSEE புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் (I&A) நிலையத்தின் மேம்பாடு மற்றும் மீளமைப்பு காணப்படுகின்றது. I&A நிலையத்துக்கு உலக புகழ்பெற்ற நிபுணரான கலாநிதி. மூஸா பால்பாகி, இந்த ஆலையால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொங்கிறீற் உற்பத்தி, சந்தை விநியோகம் போன்ற நடவடிக்கைகளின் உயர் தரம் வாய்ந்த தொடர்ச்சித்தன்மை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்துவதுடன், துறைக்கான புதிய தயாரிப்புகள், தீர்வுகளைத் தொடர்ச்சியாக வடிவமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X