Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 12 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருக்குக் கம்பிகள் உற்பத்தியில் ஈடுபடும் IWW Steel கம்பனி லிமிட்டெட், 2018 புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கும், தொழிற்சாலையை அண்மித்து வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தது.
கம்பனியின் தலைமை அதிகாரி கலாநிதி சிவலிங்கம் ரமேஷினால் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைகான முழுச்செலவையும் IWW Steel தலைமை அதிகாரி பொறுப்பேற்றிருந்தார்.
இந்த நிகழ்வில், IWW Steel கம்பனியின் தலைவர் பாடசாலைச் சிறுவர்களுக்கு அனுகூலமளிக்கும் வகையில் நிறுவனத்தின் சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கையாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
“பாடசாலை உபகரணங்களை எமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கும், தொழிற்சாலையை அண்மித்து வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அன்பளிப்பு செய்ததுடன், 2018ஆம் ஆண்டின் நடவடிக்கைகளை, நாம் பாரம்பரிய முறைப்படி ஆரம்பித்திருந்தோம். இந்தச் சிறுவர்கள், தமது கல்வி நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தி, நாட்டுக்குப் பயனுள்ள குடிமகன்களாக திகழ்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “IWW Steel கம்பனி இலங்கையில் காணப்படும் முன்னணி உருக்குக் கம்பிகள் உற்பத்தி நிறுவனமாக மிகவும் குறுகிய காலப்பகுதியில் தெரிவாகியிருந்தது. இதில் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னார்வமான செயற்பாடுகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. எனவே எமது ஊழியர்களின் ஊக்கமான மனநிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட IWW Steel கம்பனி, நாட்டின் கட்டட நிர்மாணத்துறைக்கு பொருத்தமான பல்வேறு வகையான உருக்கு கம்பிகளை உற்பத்தி செய்கிறது.
7 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago