Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்திரா அன்ட் மஹிந்திராவினால் Ideal Vision Auto & Lifestyle Show 2017 நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் மஹிந்திரா கம்பனியின் அனைத்து வகையான உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்படும். இரு சக்கர வண்டிகள் முதல் ட்ரக், பஸ் மற்றும் Ideal Group இன் ஏனைய வியாபாரங்களும் காட்சிப்படுத்தப்படும். இந்தக் காட்சியானது, 2017 ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறும். இந்த காட்சியானது, பிரத்தியேகமாக இலங்கை சந்தைக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியின்போது, உணவுகளும் ஆடைகளும் கூட வைக்கப்பட்டிருக்கும். அத்தோடு, சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகளும் ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட Ideal Group இன் நிறுவனரும் பிரதம தவிசாளருமான நலின் வெல்கம, “வருடம் முழுவதும் பல்வேறு வாகன காட்சிகள் நடாத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், இலங்கையில் முதன்முறையாக, Ideal Group சந்தைப்படுத்தும் அனைத்து வகையான வாகனங்களையும் காட்சிப்படுத்தவுள்ளோம். வேறு எந்தவொரு வாகன கம்பனியும் இவ்வாறு செய்ததில்லை. இரு சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், இலகு ட்ரக், கனரக ட்ரக், பஸ் வண்டிகள், UV க்கள், கட்டுமான உபகரணங்கள், SUV க்கள் மற்றும் கார்களை தயாரிக்கின்ற ஒரு சர்வதேச குழுமமான மஹிந்திரா அன்ட் மஹிந்திராவின் மின்சாரத்தால் இயங்கும் வாகனத்தை இலங்கையில் முதலாவது அறிமுகப்படுத்தும் வாகன வியாபார நிறுவனம் என்ற வகையில் பெருமையடைகின்றோம்” என்று தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், தற்கால உலக ஒழுங்குகளுக்கேற்ப எதிர்வரும் சில மாதங்களுக்குள் மஹிந்திராவின் தயாரிப்புக்களான மின்சாரத்தால் இயங்கும் கவர்ச்சிகரமான வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சர்வதேச செயற்பாடுகளுக்கான (தெற்காசியா) உப தலைவர் சன்ஜய் ஜாதவ் தெரிவிக்கையில், “கடந்த மூன்று வருடங்களாக மஹிந்திரா நிறுவனத்தின் அதிகளவு ஏற்றுமதிகள் நடைபெறும் நாடுகளில் மூன்றவாது இடத்தை இலங்கை பிடித்திருக்கின்றது. மஹிந்திராவின் வாகனங்கள் இலங்கையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன. அதற்கான காரணம் அவை கொண்டிருக்கின்ற பயன்பாடும் பாணியுமாகும். எமது பங்காளர்களான ஐடியல் மோடர்ஸ் நிறுவனம் இலங்கையில் நன்கு ஸ்தாபிதமடைந்துள்ள ஒரு வாகன நிறுவனமாகும். அவர்கள் கொண்டிருக்கின்ற சந்தை குறித்த அறிவும், தொழில்வாண்மை நிபுணத்துவமும் எமது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன. சிறந்ததொரு வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குவதற்காகவும், எமது வாடிக்கையாளர்களுடன் மேலதிக தொடர்புகளை ஏற்படுத்துவதற்காகவும் எமக்கு வாய்ப்பளிக்கின்ற இந்த தனித்துவமான காட்சி குறித்து எமது உயர் முகாமைத்துவமும் நானும் சந்தோசமடைகின்றோம். மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்” என்று தெரிவித்தார்.
28 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
56 minute ago