Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 16 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
Richard Pieris Finance Ltd நிறுவனம், Islamic Finance Forum இன் தெற்காசிய வருடாந்த மாநாட்டில் மூன்று விருதுகளைத் தனதாக்கியுள்ளது. இந்நிகழ்வு அண்மையில் Ramada ஹோட்டலில் நடைபெற்றது. பல்வேறு வர்த்தகத்துறைகளில் கால்பதித்துள்ள Richard Pieris and Company PLC நிறுவனத்தின் ஒரேயொரு நிதியியல் சேவைப் பிரிவாக இந்நிறுவனம் அமைந்துள்ளது.
Richard Pieris Finance Ltd நிறுவனத்தின் ARIJ இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவானது, இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவில் (Islamic Banking Window) தங்க விருதையும், இஸ்லாமிய நிதிச் சேவையில் வருடத்தில் மிகச் சிறந்த வளர்ச்சி கண்டமைக்கான (Islamic Finance Turnaround Company of the Year) தங்க விருதையும் மற்றும் இஸ்லாமிய குத்தகை நிறுவனப் பிரிவில் (Islamic Leasing Company) வெள்ளி விருதையும் வென்றுள்ளது.
நிதியியில் சேவைகளை வழங்குவதில் மிகக் குறுகிய கால தொழிற்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ள அதன் சொத்து இருப்பை இந்த ஆண்டில் ரூ. 13 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் வரிக்கு பின்னரான இலாபத் தொகையை ரூ. 388 மில்லியனாகப் பதிவாக்கியுள்ளதுடன், திரட்டிய வைப்புத் தொகையையும் ரூ. 4 பில்லியனாக அதிகரித்துள்ளது.
“நாம் தொழிற்பட ஆரம்பித்த காலம் முதல், இலாபகரமான உற்பத்திகளை வழங்குவதன் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான சேவையை வழங்குவதை நாம் முன்னெடுத்து வந்துள்ளதுடன், நிதியியல் துறையில் எமது நிலையமைப்பை வலுப்படுத்தியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கியுள்ள சேவைகளுக்கான இப்படியான ஒரு இனங்காணல் அங்கிகாரத்துடன், விருதுகளை வென்றுள்ளமை எமக்கு மிகுந்த பெருமையளிப்பதுடன், இதற்காக எமது வாடிக்கையாளர்களுக்கே நாம் நன்றி செலுத்த வேண்டும்” என்று Richard Pieris Finance Ltd நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே.எம்.எம். ஜாபீர் குறிப்பிட்டார்.
17 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago