2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

LEGO குழுமத்தால் KTIக்கு உயர் விருது

Administrator   / 2016 நவம்பர் 14 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

Kiddies & Toys International (KTI) நிறுவனத்தின் தனித்துவமான வாடிக்கையாளர் இடைத்தொடர்பு முன்னெடுப்புக்களுக்காக LEGO குழுமத்திடமிருந்து இனங்காணல் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. பிராந்தியத்தில் ஏனைய விநியோகத்தர்களை விட முன்னிலையில் திகழும், இந்த இலங்கை நிறுவனம், அண்மையில் டென்மார்க் நாட்டின் பில்லுண்ட் நகரில் இடம்பெற்ற வளர்ச்சியடைந்து வரும் ஆசியாவிற்கான LEGO® விநியோகத்தர்கள் மாநாட்டில் “மிகச் சிறந்த விளையாட்டு இறுதிச் சுற்று திட்டங்கள் மற்றும் அதனை நிறைவேற்றுதல்” ((Best Big Bets Plans and Execution) என்ற உச்ச விருதைத் தனதாக்கியுள்ளது. சிறுவர்கள் தமக்குள் உள்ள படைப்பாக்கத்திறனை வெளிக்கொணருவதற்கு உதவும் வகையில் புத்தாக்கமான, முப்பரிமாணத் தோற்ற அனுபவங்களுடன் இலங்கை முழுவதும் LEGO இன் மகிழ்ச்சியை பரப்புவதில் KTI இன் முயற்சிகளுக்கான இனங்காணல் அங்கிகாரமாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.  

“வியப்பூட்டும் எமது நிகழ்வுகளுக்காகப் பெருமதிப்பு மிக்க இந்த மேடையில் இனங்காணல் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றமை எமக்கு கிடைக்கப்பெற்ற ஒரு கௌரவமாகும். LEGO பொருத்தல் கட்டங்கள் வெறுமனே விளையாட்டுப் பொருட்கள் என்பதற்கு அப்பால் சிந்தனையைத் தூண்டுபவை. இளம் சிந்தனைகளை விருத்தி செய்வதற்கு அவை உதவுவதுடன், சிறுவர்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்த எப்போதும் உதவி வந்துள்ளன. தர்க்கரீதியானச் சிந்தனை மற்றும் அளவற்றப் படைப்பாக்கத்திறன் ஆகியவற்றின் தனித்துவமான இணைப்பின் மூலமாக சிறுவர்கள் கற்றுக்கொள்வதை அவை ஊக்குவிக்கின்றன. இதனாலேயே பெற்றோர் தமது சிறுவர்கள் விளையாடும் வேளைகளில் LEGOஇனை உள்ளிணைப்பதை எப்போதும் நாடுகின்றனர். இது தொடர்பான ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் அதனை சற்று மேம்படுத்தி, பெற்றோர் மற்றும் சிறுவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் நாம் அதனை மாற்றியமைத்துள்ளோம்,” என்று KTI நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான யொஹான் ஸியாட் குறிப்பிட்டார்.  

LEGO DAY நிகழ்வுகளில் LEGO அனுபவத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு தினந்தோறும் 150 இற்கும் மேற்பட்ட சிறுவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்வுகள் சிறுவர்களுக்கு தமது சொந்தக் கற்பனைகளை விருத்தி செய்வதற்கு இடமளித்து, அவர்கள் கதை சொல்லுதல், பொறியியல் மற்றும் கண்டுபிடிப்பு போன்ற திறமைகளை ஒரு சில மணி நேரத்துக்கு வளர்த்துக்கொள்ள இடமளித்திருந்தன. இதன் மூலமாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் முடிவில் அதிசிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கட்டுமான வடிவமைப்புக்களைச் செய்தவர்களுக்கு தமது புதுமையான முயற்சிகளை வீட்டிலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் LEGO விளையாட்டுத் தொகுதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் அத்தினத்தின் நினைவுப்பரிசாக LEGO வர்த்தக நாமமிடப்பட்ட அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .