Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 13 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன டயர்கள் மீள கட்டியெழுப்பல், டயர் inner-flaps, கட்டட மூலப்பொருட்கள் மற்றும் வீட்டு மின்சார சாதனங்கள் ஆகியன தொடர்பில் வியாபாரத்தில் ஈடுபடும் MAPS இன்டர்நஷனல் பிரைவட் லிமிட்டெட், தனது முதலாவது விநியோகஸ்த்தர் மாநாட்டை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்திருந்தது.
இந்த நிகழ்வு கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதையும் சேர்ந்த MAPS இன்டர்நஷனல் பிரைவட் லிமிட்டெட் விநியோகஸ்த்தர்கள், முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2016ன் சிறந்த விநியோகஸ்த்தர்களுக்கு பணப்பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. பங்குபற்றியிருந்த சகல விற்பனை முகவர்களுக்கும் ஊக்குவிப்பாக அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
விருதுகள் வழங்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, MAPS இன்டர்நஷனல் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தினால் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இந்த தயாரிப்புகளின் தொழில்நுட்ப உள்ளம்சங்கள் தொடர்பான விளக்கங்களை MAPS இன்டர்நஷனல் பிரைவட் லிமிட்டெட் பதில் பொது முகாமையாளர் (வீட்டுப்பாவனை இலத்திரனியல் சாதனங்கள்) எம்.ஜே.முஷ்னி வழங்கியிருந்தார்.
2016இன் சிறந்த விநியோகஸ்த்தர்களுக்கு பணப்பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. பங்குபற்றியிருந்த சகல விற்பனை முகவர்களுக்கும் ஊக்குவிப்பாக அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago