2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

MDRT மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸின் ஊழியர்கள் பங்கேற்பு

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த அங்கத்தவர்களுக்கு இந்த முறையும், Million Dollar Round Table (MDRT) வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர். இந்த மாநாடு, அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் நடைபெற்றது.   

1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட MDRT அமைப்பு, நிதித்துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட உலகின் முன்னணி சுயாதீன சர்வதேச அமைப்பாகும்.  உலகளாவிய ரீதியில் 67 நாடுகளின் 500 க்கும் அதிகமான நிறுவனங்களின் ஆயுள் காப்புறுதி, நிதிச்சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் அதிகாரிகள் 43,000க்கும் அதிகமானோர் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். 

சிறந்த தொழில்சார் அறிவைக் கொண்டிருப்பது, ஒழுக்கத்தைக் கடுமையாகப் பேணுவது, உயர்ந்த மட்ட வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக் கொடுப்பது போன்ற அம்சங்களை அங்கத்தவர்கள் மத்தியில் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.  

MDRT ஐ பிரதிநிதித்துவப்படுத்துவது காப்புறுதித்துறையில் மிகவும் உயர்ந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை எய்தும் நபர்களை உருவாக்குவதற்கு,யூனியன் அஷ்யூரன்ஸ் தனது மனித வளங்கள் பிரிவை உறுதியான மட்டத்தில் பேணுவதுடன், இந்தப் பிரிவு தொடர்ச்சியாகப் பெற்று வரும் விருதுகளும் காரணமாக அமைந்துள்ளன. 

திறமையான நபர்களை இலக்காகக் கொண்டு, சர்வதேச பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கவும் தலைமைத்துவ விருத்திக்கு முக்கியத்துவமளித்து, சுயாதீன சிந்தனைகளை செயற்பாட்டில் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பதனூடாக, MDRT வெற்றிகளை பெற்றுக் கொள்ள யூனியன் அஷ்யூரன்ஸுக்கு முடிந்துள்ளது.

இதுவரையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இருவர், சானக அப்புஹாமி (சிலாபம்), உதான் சில்வா (களுத்துறை) ஆகியோர் MDRT வாழ்நாள் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர். இரண்டு அங்கத்தவர்களுக்கு (சானக அப்புஹாமி, கெலும் ஜயசிங்க (மஹரகம) ஆகியோருக்கு MDRT Court of Table அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன், வங்கிக் காப்புறுதிச் சேவையில் அங்கத்தவர்கள் 14 பேருக்கு, MDRT அங்கத்துவம் கிடைத்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .