2025 ஜூலை 23, புதன்கிழமை

Maggi நூடில்ஸுக்கு SLSI அங்கிகாரம்

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே நிறுவனத்தின் Maggi நூடில்ஸ் தயாரிப்புகளுக்கு, அவற்றின் உயர் தர நடைமுறைகளுக்காக, SLSI (இலங்கை கட்டளைகள் நிறுவனம்) ஏற்பாடு செய்திருந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இனங்காணல் அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

நூடில்ஸ் உற்பத்தியும் தற்போது SLS தரச்சான்று அங்கிகாரத்தைப் பெற்றுள்ளதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது.   

இலங்கையின் தேசிய தரக் கட்டளைகள் அமைப்பாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் இயங்குவதுடன், சர்வதேச கட்டளைகள் நிறுவனத்தின் ஓர் உறுப்பு நிறுவனமாகவும் அது செயற்படுகிறது.

இலங்கை கட்டளைகள் தரச்சான்று அங்கிகாரம் (SLS) என்பது உற்பத்தியொன்று இலங்கை தர நடைமுறை வரையறைகளுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்படுவதையும், தரத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

கணக்காய்வுகள் மற்றும் உற்பத்தி சோதனை நடவடிக்கைகள் மூலமாக நிறுவனத்தின் தர நிர்ணய முறைமை ஒழுங்காகக் கண்காணிக்கப்பட்டு, அதன் மூலமாக தொடர்ச்சியான இணக்கப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.   

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான பிரதீப் குணவர்த்தன கூறுகையில், “நெஸ்லே நிறுவனம் தனது Maggi நூடில்ஸ் உற்பத்தி வரிசைக்கு SLS சான்று அங்கிகாரத்தை பெற்றுள்ளமைக்காக நெஸ்லே நிறுவனத்துக்கு எனது இதயபூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SLS உற்பத்திச் சான்று அங்கிகாரமானது, தரத்தின் சின்னமாக விளங்குவதுடன், உற்பத்திக்குச் சுயாதீன அரசாங்க அமைப்பினால் சான்று அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தரச்சான்று அங்கிகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதன் மூலமாக தர முகாமைத்துவ நடைமுறைகளுக்கு இணங்குதல் என்ற இனங்காணல் அங்கிகாரச் சின்னத்தை Maggi பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.  

“Maggi நூடில்ஸ் உற்பத்தியின் தரத்துக்கு அதியுச்ச சுயாதீன உத்தரவாதத்தைப் பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த பூரிப்பளிக்கின்றது” என்று நெஸ்லே நிறுவனத்தின் உணவுத்துறைக்கான பிரதித் தலைமை அதிகாரியான பிரியதர்ஷினி கருணாரட்ன குறிப்பிட்டார்.

“இலங்கையில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள Maggi, பல தலைமுறைகளாக நாட்டில் நம்பிக்கைமிக்க வீட்டு விருப்பத்தெரிவாக திகழ்ந்து வருகின்றது. சுவை மற்றும் நலச்செழுமைக்கான உத்தரவாதத்துடன், அதியுயர் தரம் கொண்ட உற்பத்திகளை வழங்குவதில் எப்போதும் வலுவான கவனத்தைச் செலுத்தியுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், நெஸ்லேயைப் பொறுத்தவரையில், இது மிக முக்கியமான ஒரு சாதனை இலக்காக மாறியுள்ளது” என்று அவர் மேலும் தொடர்ந்து குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .