2025 ஜூலை 26, சனிக்கிழமை

NDB வென்னப்புவ கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்

Gavitha   / 2017 மார்ச் 14 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

NDB வென்னப்புவ கிளை இல. 204இ சிலாபம் வீதி, வென்னப்புவ என்ற முகவரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. NDB இன் இந்தக்கிளையானது, வாரநாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.  

சிறந்ததொரு பொருளாதார மையமாக விளங்கும் வென்னப்புவ, பல்வேறு தொழிற்றுறை முனைப்புகளுக்கு களம் கொடுத்துள்ளதுடன், வடமேல் மாகாணத்தின் செயற்றிறன்மிகு வர்த்தக ஸ்தலமாகத் திகழ்கிறது. இந்நகரானது, நாட்டில் இடம்பெறும் பொருளாதார மீளுருவாக்கத்துக்கு பெரும் பங்களிப்பினை அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கிளையின் இடமாற்றத்துடன், இப்பிராந்தியத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் தாம் கொண்டுள்ள உறவினை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதுடன், சாத்தியமிகு தொழில் முயற்சியாளர்கள், தனிப்பயனாக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வங்கியியல் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமது வாயிலை திறந்து வைத்துள்ளது. புதிய தொழில் முனைப்பாளர்கள் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வங்கியியல் சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். நுண்நிதியில் துறையில் நிகரற்றத் தீர்வுகளை அளிக்கும் NDB, சிறிய மட்ட தொழின்முனைவோருக்கு சிறந்தப் பயனை அளிப்பதுடன், பெண்களுக்கு தொடர்ச்சியான அதிகார அங்கிகாரத்தினை அளிப்பதுடன், அவர்கள் தமது வாழ்வில் மேம்படுவதற்கான நிதி வழிகாட்டுதலையும் கொடுக்கின்றது  

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வங்கியியல் சேவைகளில் கொண்டுள்ள நிபுணத்துவத்தின் உதவியுடன், NDB குறுகிய கால பணி முதலீட்டுக் கடன்கள், வழங்குநர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான நிதி, நீண்டகால கடன்கள் போன்ற வசதிகளை அளிக்கும். இது குறித்த பிராந்தியத்தில் வதியும் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் தொழிற்றுறை நெறிஞர்கள் ஆகியோருக்கு அனுகூலத்தினை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X