Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
OPPO மொபைல்ஸ், தனது புதிய OPPO F5 இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வில், தனது புதிய வர்த்தக நாமத்தொனிப்பொருளான ‘The Selfie expert and leader’ என்பதையும் அறிவித்திருந்தது. 28 சர்வதேச சந்தைகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள OPPO, தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உலகளாவிய ரீதியில் 200 மில்லியனுக்கும் அதிகமான பரந்தளவு இளம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட வர்த்தக நாமத்தின் முதலாவது FHD+ full screen மாதிரியாக F5 அமைந்துள்ளது. இதில் A.I. Beauty Technology உள்ளடங்கியுள்ளது. selfie படமொன்றில் அழகியல் தன்மையை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக இது அமைந்துள்ளது. A.I. Beauty Technology, selfie புகைப்படக்கலையைப் புதிய நிலைக்கு உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.
ரூ. 47,990 எனும் விலையில் அமைந்துள்ள F5, நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மேலும் இரு தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இதில், F5 6GB மற்றும் F5 Youth ஆகியன OPPO ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமது தெரிவுகளுக்கு பொருத்தமானதைத் தெரிவு செய்து கொள்ள வாய்ப்பை வழங்குகின்றன. இந்த இரு தெரிவுகளும், டிசெம்பர் மாதம் முதல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.
OPPO ஸ்ரீலங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத்தெரிவிக்கையில், “OPPO ஸ்ரீ லங்காவை பொறுத்தமட்டில், இது மிகவும் விறுவிறுப்பான தருணம், நாம் நவீன F5 மாதிரியை A.I beauty Technology உடன் அறிமுகம் செய்துள்ளதுடன், புதிய மூலோபாய பாதையில் வளர்ச்சிப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இலங்கையர்கள், குறிப்பாக இளைஞர்கள் இந்த மாதிரியை பெருமளவு வரவேற்பார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.
OPPOவின் புதிய வர்த்தக நாமத்தூதுவரான சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவிக்கையில், “வளர்ந்து வரும் இந்த OPPO குடும்பத்தில் நானும் அங்கம் வகிப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். A.I. Beauty Technology குறித்து நான் அதிகளவு திருப்தியடைகிறேன். குறிப்பாக OPPO F5 இல் selfieகளை எடுக்கும் போது சிறந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. எனது selfieகள் எந்தளவு இயற்கையானவையாக அமைந்துள்ளன என்பதையிட்டு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை இளைஞர்களின் Selfie எதிர்பார்ப்புகளை OPPO இனங்கண்டுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்கது” என்றார்.
27 minute ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
23 Jul 2025