Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 14 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
PanAudio Pvt. Ltd, ஜப்பானின் EIKI industrial company உடன், 25 வருட கால பங்காண்மையை பூர்த்தி செய்துள்ளது. இது குறித்து அறிவிக்கும் நிகழ்வு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பங்கேற்றிருந்ததுடன், PanAudo மற்றும் EIKI ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் இரு நிறுவனங்களும் இணைந்து அறிமுகம் செய்திருந்த துறையின் புத்தாக்கங்கள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
1953ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் ஸ்தாபிக்கப்பட்ட Eiki Industrial Co., Ltd., பல துறைசார் அறிமுகங்களை மேற்கொண்டிருந்தது. இதில் 16mm projectorஆம் அடங்கியிருந்தது. 1986ஆம் ஆண்டில், இந்நிறுவனம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 50 வருட காலம் பழமை வாய்ந்த Bell & Howell கம்பனியை கையகப்படுத்தியிருந்தது.
1980ஆம் ஆண்டுகளில், LCD video projection தொழில்நுட்பத்தை EIKI கண்டுபிடித்திருந்தது. 90களின் முற்பகுதியில் உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தப்பட்டிருந்த இரு LCD Video புரொஜெக்டர்கள் வர்த்தக நாமங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. 90களின் நடுப்பகுதியில், EIKI வர்த்தக நாமத்திலமைந்த LCD Projectorகள் computer projection க்கு வழிகாட்டியாக அமைந்திருந்தன. ஐரோப்பா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் தனது சந்தைகளை நிறுவனம் படிப்படியாக விஸ்தரித்திருந்தது. அத்துடன், தனது சர்வதேச பிரசன்னத்தையும் மேம்படுத்தியிருந்தது. EIKI புத்தாக்கம் மற்றும் உயர்தர விற்பனைக்கு பிந்திய சேவைகள் ஆகியவற்றில் நம்பிக்கைக் கொண்டுள்ளது.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago