Janu / 2026 மே 12 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியான Prime Group இன் கட்டுமானப் பிரிவான 'Prime Constructions (Pvt) Ltd' (PCL), சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. தரம், நம்பிக்கை மற்றும் சர்வதேச நியமங்கள் ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக இச்சான்றிதழ் அமைந்துள்ளது.
ISO 9001:2015 இன் முக்கியத்துவம்: இந்தச் சான்றிதழின் மூலம், Prime Constructions நிறுவனத்தின் திட்டமிடல் முதல் இறுதி விநியோகம் வரையிலான ஒவ்வொரு கட்டமும், சீரான மற்றும் தரமான செயல்முறைகளின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கட்டுமானக் குறைபாடுகளைக் குறைப்பதற்கும், தேவையற்ற கூடுதல் செலவுகளைத் தவிர்ப்பதற்கும் உதவுவதுடன், நிறுவனத்தின் நீண்டகால நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகின்றது.
வாடிக்கையாளர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பலன்கள்:
உயர்தரம் மற்றும் நம்பகத்தன்மை: செயற்திட்டங்கள் உரிய நேரத்தில், திட்டமிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் மற்றும் சர்வதேச தரநிலைகளுடன் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
வெளிப்படைத்தன்மை: கட்டுமானப் பொருட்களின் தரம் மற்றும் பரிசோதனைகள் தொடர்பான தெளிவான ஆவணப்படுத்தல் மூலம் வீட்டு உரிமையாளர்கள் பயனடைவர்.
திறமையான மேலாண்மை: வளங்கள் விரயமாவது தணிக்கப்பட்டு, செயற்பாட்டு ரீதியாக ஏற்படும் தவறுகள் குறைக்கப்படுவதை இச்சான்றிதழ் உறுதி செய்கிறது.
பொது முகாமையாளரின் கருத்து: இது குறித்து Prime Constructions இன் பொது முகாமையாளர், பொறியியலாளர் சுஜித் ரூபசிங்க குறிப்பிடுகையில்:
“ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளமை என்பது, தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையில் எமது குழுவினர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. சிக்கலான செயற்திட்டங்களை ஒழுக்கத்துடன் கையாளும்திறன் எமது நிறுவனத்திடம் உள்ளது. நாம் எமது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், இது மிக முக்கியமான ஒரு நகர்வாகும்.”
குறிப்பிடத்தக்க செயற்திட்டங்கள்: '43 by the Sea Marine Drive', 'The Palace', 'The Season' மற்றும் கொழும்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 'Tower Cosmos & Amaa', 'Shine On', 'Skye Blossom' போன்றவை Prime Constructions இன் சமீபத்திய குறிப்பிடத்தக்க திட்டங்களாகும். இவை நவீன வடிவமைப்பையும் மேம்பட்ட வாழ்க்கை முறையையும் ஒன்றிணைக்கின்றன.

26 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
59 minute ago