2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

Prime Group இனால் குடிமனைசார் டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Group, கொள்முதல், நிர்மாணம், செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் செயற்பாட்டு பாய்ச்சல்கள் ஆகியவற்றில் ஐந்தாண்டு பரந்த டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தை பூர்த்தி செய்து, இலங்கையர்களின் குடிமனைக் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு அவசியமான டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

சந்தையில் ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் காணப்பட்ட போதிலும், Prime Group இன் தெரிவு, சகல புத்தாக்கப் பணிகளையும் ஓரிடத்தில் கொண்டிருக்கும் ஒரு ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதாக அமைந்திருந்தது. அவ்வாறான பரிபூரண வழிமுறையினூடாக, வாடிக்கையாளர்களது வீட்டு உரிமையாண்மை கனவு நனவாகும் வரையில் ஒப்பற்ற சௌகரியம், வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறன் போன்றன உறுதி செய்யப்படும்.

ரியல் எஸ்டேட்டில் சிறப்பு, அணுகல் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை Prime Group மாற்றியமைத்து வருவதுடன், தொலைநோக்குடைய செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்து, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒப்பற்ற பயணத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும். மேலும் தொழில்னுட்பத்தை பயன்படுத்தி வீடமைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் Prime Group, ஒவ்வொரு செயற்பாட்டிலும் வாடிக்கையாளருக்கு முன்னுரிமை எனும் மனநிலையை பின்பற்றுகிறது.

இலங்கையில் முதன் முறையாக, ரியல் எஸ்டேட் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 1322 எனும் நான்கு இலக்க ஹொட்லைனை Prime Group அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இந்தப் புத்தாக்கம், இல்லங்கள் பற்றிய தகவல்கள், நிபுணத்துவ வழிகாட்டல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பினூடாக ஆதரவளித்தல் போன்றவற்றை வழங்கி, இலங்கையில் வீட்டின் உரிமையாண்மையை கொண்டிருக்கும் வாய்ப்பை விரிவாக்கம் செய்துள்ளது.

மனிதவலு கொண்ட செயற்பாடுகள் மற்றும் கிளைகளுக்கான பயணங்களை இல்லாமல் செய்து, Prime Group இனால் வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் கணக்குகள் வழங்கப்பட்டு, அவை உடனுக்குடன் சீராக்கம் செய்யப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. தொழிற்துறையில் மற்றுமொரு புதிய அறிமுகமாக, வாடிக்கையாளர் கொடுப்பனவுகள் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், தன்னியக்கமயப்படுத்தப்பட்ட பற்றுச்சீட்டுகள் WhatsApp மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். இந்தத் தீர்வினூடாக இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முதலாவது முழுமையான தன்னியக்கமயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வைப்பு மற்றும் கொடுப்பனவு கண்காணிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உச்ச அளவில் பொருந்தும் வகையில் சொத்துக்களின் உரிமையாண்மை வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் Prime Group நம்பிக்கை கொண்டுள்ளது. The Prime Edge மொபைல் அப்ளிகேஷன் ஊடாக, முழுமையான ரியல் எஸ்டேட் அனுபவம் நேரடியாக ஸ்மார்ட்ஃபோனுக்கு வழங்கப்படுகிறது. இல்லங்கள் நிர்மாணிக்கப்படுவது என்பது டிஜிட்டல் முறையில் கையாளப்படுவதை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம். சொத்துகள், கொள்வனவுகளை கண்காணித்தல், கொடுப்பனவுகளை கண்காணித்தல் மற்றும் அறிவுறுத்தல்களினூடாக சொத்துகளை பின்தொடரலாம்.

Prime Group வாடிக்கையாளர்களுக்கு Prime Bee உடன் சொத்துகள் முதலீடு தொடர்பான எதிர்காலத்தில் காலடி தடம் பதிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எழுத்துரு மற்றும் குரல்சார் AI-இனால் வலுவூட்டப்பட்ட உதவிசார் வழிகாட்டல்கள் வழங்கப்படும். மேலும் Prime Bee மூலம் தெரிவுகளை பற்றி அறிந்து கொள்வதற்கு, தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மற்றும் உடனடியாக பிரத்தியேகமான ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் வழங்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X