Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் சனத்தொகைக்கு பெரும் அச்சுறுத்தலாக பரவி வரும் Covid 19 தாக்கம் காரணமாக, தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெருமளவான மக்கள் தனிமைப்ப டுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட வண்ணமுள்ளனர். இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், சுகாதார அமைச்சுகள் நிறுவனங்களிடம் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோருகின்றன. சில நிறுவனங்கள் இந்த நிலையை பின்பற்றி வருகின்றன.
வீட்டிலிருந்து பணியாற்றுவது என்பது சாத்தியமான விடயமல்ல. மக்கள் தமது கணினிகள், திறன்பேசிகளில் பணியாற்றுவதுடன், தமது பாதுகாப்பை உறுதி செய்து உற்பத்தித்திறனாக திகழ முடியும். Viber போன்ற app களினூடாக வீட்டிலிருந்து அதிகளவு வினைத்திறனுடன் பணியாற்றக்கூடியதாக இருக்கும். இந்தக் கொடிய COVID-19 பரவி வரும் நிலையில் Viber இல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில வழிமுறைகள் வருமாறு.
Group call ஊடாக சந்திப்புகளை மேற்கொள்ளவும். பெருமளவான குழுக்கள் மத்தியில் COVID-19 இலகுவாக பரவக்கூடியது என்பதால், உங்கள் நிறுவனத்தின் முக்கியமான சந்திப்புகள், கலந்துரையா டல்களை voice calls களுக்கு மட்டுப்படுத்திக் கொள்வது சிறந்த தெரிவாகும். நேரடி சந்திப்புகளில் காணப்படும் இடர்களை தவிர்த்துக் கொள்ள Group calls சிறந்த வழிமுறையாகும். Group call இல் பங்கேற்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை Viber அண்மையில் 10 ஆக அதிகரித்திருந்தது. மிகவும் முக்கியமான சந்திப்புகளுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
பாரிய அளவிலான கோப்புகளை அனுப்ப முடியும். இலகுவாக கோப்புகளை பகிர்வதற்கு Viber வசதியளிக்கின்றது. நீங்கள் உங்கள் இணை ஊழியர்கள் மற்றும் வியாபார பங்காளர்களுக்கு முக்கியமான அறிக்கைகள், கோப்புகளை துரிதமாக அனுப்பலாம். 200MB வரை கோப்புகளை அனுப்ப முடியும். அதைவிட பெரிய கோப்புகளை cloud சேவைகளில் பதிவேற்றி அந்த linkகளை Viber chatஇல் பகிர்ந்து கொள்ள முடியும்.
கணினியில் வரையறையின்றி பணியாற்றலாம். Viber இன் கணினி பயன்பாட்டு தெரிவு ஊடாக, அழைப்புகள் மற்றும் chat களை மேற்கொள்ள முடியும். வசிப்பிடத்திலிருந்தவாறே சகல ஊழியர்களுடனும், வாடிக்கையாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தலாம்.
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago