2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

SLASSCOM அங்குரார்ப்பண புத்தாக்க விருதுகள் 2018

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“Celebrate Ingenuity!” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட SLASSCOM புத்தாக்க மாநாடு மற்றும் விருதுகள் நிகழ்வு அண்மையில் சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக நடைமுறை முகாமைத்துவத் தொழிற்றுறை மத்தியில் புத்தாக்குனர்களுக்கு இனங்காணல் அங்கிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

விருதுகளை வென்ற அனைவருக்கும் SLASSCOM தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன், நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

ஏழு வகையான விருது வழங்கல் பிரிவுகளின் கீழ் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நுழைவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமை மிகவும் உற்சாகமளிக்கும் ஒரு விடயமாகும்.

நுழைவு விண்ணப்பங்களின் தரத்தை இரு சர்வதேச நடுவர்களும் பாராட்டியுள்ளனர். “அனைத்து நுழைவு விண்ணப்பங்களும் மிகச் சிறந்தவையாகவும், தனித்துவமான சிந்தனைகளைப் பின்பற்றியவையாகவும் அமைந்துள்ளதுடன், குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக, தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருந்தன.

இந்த மகத்தான முயற்சிக்கு நடுவராகச் செயற்படுவதற்கு இடமளித்தமைக்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று Bella Pear LLC நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், பிரதம நிதியியல் அதிகாரியுமான ரெனி கொன்சலாஸ் குறிப்பிட்டார்.

“முதற்கட்ட தெரிவை நிறைவு செய்த பின்னர், இறுதிக்கட்டத் தெரிவை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு செயற்றிட்டத்தையும் மிக ஆழமாக நான் ஆராய வேண்டியிருந்ததுடன், அது இலகுவான ஒரு பணியாக அமைந்துவிடவில்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

வெற்றிபெற்றுள்ள நிறுவனங்களுக்கு இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் மகத்தான வளர்ச்சி வாய்ப்புக்கள் உள்ளன. இது உண்மையில் ஒரு மகத்தான உற்பத்தியாக அமைந்துள்ளதுடன், சமூகத்தை உள்வாங்குவதற்கான ஒரு மகத்தான கருவியாகவும் உள்ளது.

அனைத்துக்கும் மேலாக, தெரிவு செய்யப்பட்ட செயற்றிட்டங்கள் அனைத்தும், அவற்றின் வலிமை மற்றும் மேம்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் காரணமாக வெற்றியை ஈட்டக்கூடியவையாக அமைந்துள்ளதுடன், அவை அனைத்தையும் காணப்பெற்றமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது” என்று Prizle நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கிலாமே அலாபேட் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .