Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
99X Technologyஇன் இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம், SLASSCOMஇன் 2015/16 பருவ காலத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற SLASSCOM வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
தகவல் தொழில்நுட்பம்/ மென்பொருள் முகாமைத்துவம் ஆகியவற்றில் சேகரம் சுமார் 25 வருட கால சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இவர் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPM ஆகிய துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளார்.
SLASSCOM இன் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPM துறை தொடர்பில் தமது எதிர்கால நோக்கங்கள் பற்றிய தெளிவுபடுத்தலை வருடாந்த பொது ஒன்றுகூடலில் அவர் வழங்கியிருந்தார். இதன் போது, அறிவுசார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்களிப்பு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும் என்பது பற்றியும், அதன் மூலமாக இலங்கையை மத்தியளவு வருமானமீட்டும் நாடாக மாற்றியமைத்துக் கொள்ளவும் உறுதுணையாக அமைந்திருக்கும் என்றார்.
கல்விமான்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறைக்கு இலங்கை சொத்துக்களின் உரிமையாண்மையைக் கொண்ட செயலணியை உருவாக்க வேண்டும், இதன் மூலமாக துறையில் கல்விமான்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வதை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். வெளிநாடுகளில் இவர்கள் எதிர்பார்த்துச் செல்லும் அதே சூழலை இலங்கையில் எம்மால் ஏற்படுத்த முடியுமாயின், அவர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஒழுங்குபடுத்துநர்களுடன் கைகோர்த்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPM துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வீடமைப்பு மற்றும் இதர நிலையான சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில், 'இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPM துறையை மேல் மாகாணத்துக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய தேவை காணப்படுகிறது. இதன் மூலமாக, நாட்டில் தொழில்நுட்ப கட்டமைப்பை பரந்தளவு விஸ்தரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தொழில்முயற்சி அடிப்படையிலான சூழல் கட்டமைப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். 2022 ஆம் ஆண்டளவில் 1000 புதிய நிறுவனங்களை நிறுவும் செயற்பாட்டுக்கு சிறந்த அடித்தளமாக அமையும்' என்றார்.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPM துறையின் தேசிய சம்மேளனமாக SLASSCOM திகழ்கிறது. அத்துடன், இலங்கையின் வியாபார மற்றும் வர்த்தக செயற்பாடுகளை ஊக்குவித்தல், கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தல், ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுக்கான ஊக்குவிப்புகள், தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கான உதவிகள் போன்றன வழங்கப்படுகின்றன. 2022 இல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொழிற்துறையை உருவாக்குவதை நோக்காக கொண்டுள்ளதுடன், அதனூடாக 200,000 நேரடி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், 1000 ஆரம்ப நிறுவனங்களையும் நிறுவவும் திட்டமிட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago