2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

SLASSCOM-இன் National Ingenuity விருதுகள் 2022

Editorial   / 2022 ஜூலை 21 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM), நாடு முழுவதிலுமிருந்து 35 மாகாண மற்றும் 24 தேசிய வெற்றியாளர்களின் சில சிறந்த கண்டுபிடிப்புகளைக் கொண்டாடும் வகையில், 2022 ஜூலை 1 ஆம் திகதி National Ingenuity விருதுகளின் இறுதிப் போட்டியை நடத்தியது.

சிறந்த உலகளாவிய சேவைகள்/பிபிஎம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இருந்து இந்த ஆண்டுக்கான தேசிய வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த உலகளாவிய சேவைகள்/ BPM மாற்றம் பிரிவில் HSBC வென்றது, CDBஆனது மிகவும் புதுமையான உலகளாவிய வணிக சேவை/ BPMக்கான விருதை வென்றது.

OREL IT ஆனது சிறந்த உலகளாவிய வணிகச் சேவை/ BPM தொழில்முனைவோர் மற்றும் சிறந்த உலகளாவிய வணிகச் சேவைகள்/ பிராந்திய விரிவாக்கத்திற்கான BPM ஆகிய இரண்டிற்கும் விருதுகளை வென்றது. IT/BPM துறையில் சிறந்த UN17 SDG முன்முயற்சி/மென்பொருள் தீர்வுக்கான பட்டம் ExamHUB இலங்கைக்கு வழங்கப்பட்டது. சிறந்த Disruptive Product Innovation மற்றும் சிறந்த கிளையண்ட் டெலிவரி கண்டுபிடிப்பு பிரிவுகள் இரண்டையும் CICRA வென்றது.

உள் செயல்முறைகள், தொழில்நுட்பம் அல்லது கட்டமைப்பில் சிறந்த கண்டுபிடிப்பு பிரிவில் VizuaMatrix வெற்றிப்பெற்றது. அதே நேரத்தில் Magicbit விருதை வென்றதுடன் இந்த ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்-அப் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் பெண் தொழில்நுட்பக் கலைஞர் என்ற பட்டத்தை CareerMeக்காக அஞ்சனா குலசேகர பெற்றார். ஐஐடி சிறந்த புதுமையான தயாரிப்பு / திட்டம் - பல்கலைக்கழகம், சிறந்த புதுமையான தயாரிப்பு / திட்டம்  மியூசியஸ் கல்லூரி வென்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, அமெரிக்க இராஜதந்திரியும் தற்போது USAID இலங்கை மற்றும் மாலைத்தீவின் செயல் துணைப் பணிப்பாளருமான சட்டத்தரணி Ali Ezzatyar கலந்துகொண்டு SLASSCOM-இன் National Ingenuity விருதுகள் பற்றி பாராட்டினார்.

"இலங்கை அதிக ஆற்றல் கொண்ட நாடு. SLASSCOM அதன் ICT துறையை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. நாட்டின் வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. எதிர்கால தொழில் பாலம் போன்ற திட்டங்களில் யு லீட் மூலம் நாங்கள் பங்காளியாக இருக்கும் இலங்கையின் திறனை அமெரிக்கா பார்க்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு உள்நாட்டு புத்தாக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமானது. National Ingenuity விருதுகள் போன்ற நிகழ்வுகள் இதை நிறைவேற்ற வழி வகுக்கும். இலங்கையின் பிரகாசமான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விருது வென்றவர்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம்” என்றார்.

இந்த விருது நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றிய SLASSCOM இன் தலைவர் சாண்ட்ரா டி சொய்சா, “SLASSCOM ஆனது எப்போதும் IT/BPM துறையின் முக்கிய இயக்கிகளான புதுமை மற்றும் தொழில்முனைவுகளை வளர்த்து வருகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்? வெளிநாட்டு வருவாயை ஈட்ட உதவும் புதுமை, தற்போது நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறது. எனவே, இந்த நிகழ்வு நமது தேசத்தின் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கடின உழைப்பைக் கௌரவிப்பதாகும். இந்த அங்கீகாரம் உங்களது சாதனைகளின் சான்றாக உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய ஒன்றாகும்” என்றார்.

தொடர்ந்து இதனை பற்றி SLASSCOM தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க மன்றத்தின் இயக்குநர் சம்பத் ஜெயசுந்தர விளக்கினார், “SLASSCOM National Ingenuity விருதுகள் அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழக மட்டம் மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு தளமாகும், மேலும் இது SLASSCOM நாட்காட்டியின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். . வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், இந்த கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல ஊக்குவிக்கிறோம், அதனால் நாடு நீண்ட காலத்திற்கு பயனடையும்” என்றார்.

இந்த கருத்துக்களை ஆமோதித்த பிராந்திய அபிவிருத்தி மன்றத்தின் ஸ்லாஸ்காம் பணிப்பாளர் திலான் ராஜபக்ஷ, நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் அதிகளவான பங்கேற்பைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். அத்துடன், புதுமை கண்டுபிடிப்புகள் மாகாண மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

நிகழ்வுக்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) வலுவான ஆதரவை வழங்கியது இலங்கை முதலீட்டுச் சபை (BOI) மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆகியவை நிகழ்வின் தேசிய பங்காளிகளாக இருந்தன.

Wiley Global Innovation Sponsor ஆகவும், Axiata Digital Labs, Pearsons மற்றும் EYGDS பிளாட்டினம் ஸ்பான்சர்களாகவும், லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப் மற்றும் Hayleys Advantis கோல்ட் ஸ்பான்சர்களாகவும், RR Donnelly சில்வர் ஸ்பான்சராகவும் இருந்தனர்.

Price Waterhouse Coopers (PwC)செயல்முறை ஆளுமை ஸ்பான்சராகவும், இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IFC) தொழில்நுட்பப் பங்காளராகவும் இந்த நிகழ்வில் பங்குதாரர்களாக இணைந்திருந்தனர்.

SLASSCOM, டெக்கிட்ஸ் போன்ற மதிப்பு சார்ந்த திட்டங்களின் ஆரம்பித்து சிறுவர்களுககு குறியீடுகளை (codeing) கற்றுக்கொடுக்கிறது. Hack like a girl என்பது நாட்டின் முதல் மற்றும் பெண்களுக்கான ஒரே ஹேக்கத்தான் ஆகும். அத்துடன், இந்த ஆண்டுக்கான  National Ingenuity விருதுகள், இலங்கையின் மிகவும் புதுமையான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதில் SLASSCOM ஆற்றிய முக்கிய பங்கை வெளிப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .