2025 ஜூலை 05, சனிக்கிழமை

SLT-MOBITEL, SLIoT 2025 இல் அடுத்த தலைமுறை தொழினுட்ப திறமையாளர்களை கொண்டாடியது

Freelancer   / 2025 ஜூலை 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, புத்தாக்கம் மற்றும் இளைஞர் வலுவூட்டலுக்கான தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்யும் வகையில், அண்மையில் நடைபெற்ற இலங்கையின் முன்னணி Internet of Things (IoT) போட்டியான SLIoT Challenge 2025 இல் அடுத்த தலைமுறை தொழினுட்ப திறமையாளர்களை கொண்டாடியது.

இந்தப் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டி மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. போட்டிக்கான SLT-MOBITEL இன் ஆதரவு என்பது, பாரம்பரிய உதவிக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்ததுடன், SLIoT 2025 ஐ சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதில் அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பை வழங்கியிருந்தது.

SLT-MOBITEL இன் அனுசரணையில், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவினால் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்துடன் (IESL) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த SLIoT Challenge 2025 இல், நாடு முழுவதையும் சேர்ந்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தனர். பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் திறந்த நிலைகளில் பங்குபற்றுனர்கள் போட்டியிட்டு, IoT தீர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பை முன்னெடுத்துச் செல்லவும், நிஜ உலக சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையிலும் இவற்றை வடிவமைத்திருந்தனர்.

இந்த நிகழ்வின் வெளிப்பாடுகளில் SLT-MOBITEL இன் ஈடுபாடு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Microcontrollers மற்றும் IoT Basics குறித்த நடைமுறைப் பாடசாலை பயிற்சிபட்டறை உட்பட பல தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளை SLT-MOBITEL ஏற்பாடு செய்தது. தொழில் வல்லுநர்கள் மற்றும் இளங்கலை வழிகாட்டிகளால் நடத்தப்பட்ட இந்தப் பட்டறை, மாணவர்களுக்கு அடிப்படை IoT கொள்கைகள் மற்றும் நடைமுறை microcontroller நிரலாக்கத்தை அறிமுகப்படுத்தியதுடன், ஆர்வத்தைத் தூண்டி எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை வளர்த்தது.

SLT-MOBITEL தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா நிகழ்வில் பங்கேற்றதுடன், அவருடன் SLT-MOBITEL இன் இதர சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்றிருந்தவர்கள் வெளிப்படுத்தியிருந்த அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டை அவர்கள் பாராட்டியதுடன், வெற்றியீட்டியவர்களின் புத்தாக்கம் மற்றும் சிறந்த செயற்பாடுகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். போட்டியினூடாக சிறந்த திறமை வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வெற்றியீட்டிய அணியினர், அவர்களின் ஆக்கத்திறன் மற்றும் தொழினுட்ப சிறப்பு போன்றவற்றுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

பாடசாலை பிரிவில், முதலாமிடத்தை கலஹிட்டியாவ மத்திய கல்லூரியின் Neuroverse அணி சுவீகரித்தது. கொழும்பு 10, புனித சூசையப்பர் கல்லூரியின் சென்டினெல் அணி இரண்டாமிடத்தையும், எம்பிலிபிட்டிய போதிராஜ கல்லூரியின் செனுக மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர். IoT ஊடாக நிஜ உலக சவால்களை எதிர்கொள்வதில் இளம் மனங்களின் குறிப்பிடத்தக்க திறனை வெளிப்படுத்தியிருந்தது.

பல்கலைக்கழக பிரிவில், அனைத்து உயர் விருதுகளையும் மொரட்டுவ பல்கலைக்கழக அணிகள் பெற்றன. Zypher இன் தனித்துவமான தீர்வுக்காக முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து Dyson Sphere இரண்டாவது இடத்தையும், Aqua Guard மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஒவ்வொன்றும் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களையும் IoT தொழில்நுட்பத்தின் முன்னோக்கிச் சிந்திக்கும் பயன்பாடுகளையும் வெளிப்படுத்தின.

திறந்த பிரிவில், களுத்துறையைச் சேர்ந்த Smartcare அதன் தாக்கம் மற்றும் நடைமுறை IoT கண்டுபிடிப்புகளுக்காக முதலிடத்தைப் பிடித்தது. கம்பஹாவைச் சேர்ந்த Tech Tanks இரண்டாவது இடத்தையும், காலியைச் சேர்ந்த TeraNode மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இது நாடு முழுவதும் உள்ள சுயாதீன மற்றும் தொழில்முறை கண்டுபிடிப்பாளர்களால் நிரூபிக்கப்பட்ட உயர் மட்ட புத்திசாலித்தனம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை பிரதிபலித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .