2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

SLT-MOBITEL எனிடைம் டேட்டா பிளான்களை அறிமுகம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிகளை சேர்ப்பதற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்து SLT-MOBITEL, புத்தம் புதிய 100% எனிடைம் டேட்டா பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. டேட்டா Rollover உள்ளம்ச அனுகூலத்துடன் இந்த பிளான்கள் அமைந்துள்ளன.

செலுத்தும் பணத்துக்கு உச்சப் பெறுமதியை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், 100% எனிடைம் டேட்டா பிளான்களினூடாக, பரந்தளவு வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உயர் நெகிழ்ச்சித்தன்மையை பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. SLT-MOBITEL இன் நாடளாவிய ரீதியில் பரந்த 4G வலையமைப்பினூடாக, HD தர வீடியோக்கள், பாடல்கள், களிப்பூட்டும் அம்சங்கள் மற்றும் பல விடயங்களுக்கு உயர் வேகங்கள் வழங்கப்படுகின்றன.

டேட்டா பிளான்களினூடாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு தமது டேட்டா பாவனையின் மீது அதிகளவு கட்டுப்பாட்டை வழங்குவதுடன், சகல பாவனையாளர்களுக்கும் சிறந்த பெறுமதி மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், புத்தாக்கமான டேட்டா Rollover உள்ளம்சத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு அதே பிளானை மீளச் செயற்படுத்தும் போது, தாம் பயன்படுத்தியிராத டேட்டாவை முன்கொண்டு செல்வதற்கு வாய்ப்பளித்து, தமது கொள்வனவுகளுக்கு உயர் பெறுமதியை உறுதி செய்கின்றது.  வாடிக்கையாளர்களுக்கு தற்போது டேட்டா விரயமாகிவிடாது என்பதை அறிந்து, தடங்கல்களில்லாத இணைப்புத்திறனை, மனநிம்மதியாக அனுபவிக்க முடியம்.

7 நாட்களுக்கான செல்லுபடியாகும் காலத்துக்கு 512MB க்கு ரூ. 58 எனும் குறைந்த விலையில் ஆரம்பித்து, 30 நாட்களுக்கான செல்லுபடியாகும் காலத்துக்கு 18.5GB க்கு ரூ. 1,199 வரை அனுபவிக்க முடியும். பரந்தளவு செலவிடும் நிலைகளுக்கு பொருத்தமான வகையில் இந்த பிளான்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இடையிடையே பாவனைக்காக அல்லது எப்போதும் செயற்படுத்தி வைத்திருக்கும் பாவனைக்காக டேட்டா தேவைப்படும் பாவனையாளர்களுக்கு, இந்த பிளான்கள் பொருத்தமானதாக அமைந்துள்ளன. மேலும், டேட்டா rollover உள்ளம்சம், சகல பிளான்களிலும் காணப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் கொள்வனவுக்கு உயர் பெறுமதியை வழங்குகின்றது.

ஏதேனும் புதிய டேட்டா பிளான்களை செயற்படுத்துவதற்கு, வாடிக்கையாளர்கள் தமக்கு பிடித்த பெறுமதியை இலகுவாக ரீலோட் செய்ய முடியும். #170# டயல் செய்யலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X