2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

SLT-MOBITEL பசுமை வலு பிரசன்னத்தை விரிவாக்கியுள்ளது

Freelancer   / 2024 ஜூலை 15 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைபேறான ஏற்பாடுகளினூடாக காபன் பிரசன்னத்தை குறைப்பதற்கான அர்ப்பணிப்பின் அங்கமாக, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது Co-Connection Environment, Social, and Governance (ESG) மூலோபாய வழிமுறையினூடாக சூரிய வலுவில் இயங்கும் கள நிலையங்களை மேலும் விரிவாக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ESG இல் அதிகளவு கவனம் செலுத்தி, 2018 ஆம் ஆண்டில் முதலாவது சூரிய வலுவில் இயங்கும் கள நிலையத்துக்கான அடிக்கல்லை SLT-MOBITEL நாட்டியிருந்தது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், SLT-MOBITEL இல் பசுமை வலு என்பது முக்கிய நிரலாக அமைந்திருப்பதுடன், அதன் வியாபார மாதிரியில் ESG சிறந்த செயன்முறைகளை ஒன்றிணைப்பதற்கான அதன் அர்ப்பணிப்பின் அங்கமாக அமைந்துள்ளது. அதனூடாக, அது ஆதரவளிக்கும் புவி மற்றும் மக்களின் செலவில் வியாபார வெற்றி முன்னெடுக்கப்படாமையை உறுதி செய்கின்றது.

முதல் கட்டத்தின் கீழ், SLT-MOBITEL Mobile இனால் நாட்டின் பிரதான பகுதிகளை உள்வாங்கி பல திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் 1000க்கும் அதிகமான நிலையங்களை உள்வாங்க திட்டமிட்டுள்ளது.

புவி மற்றும் மக்களின் நலனுக்காக பசுமை வலுவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. அதன் பிரகாரம், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைபேறாண்மை இலக்குகளுக்கு பங்களிப்பு வழங்கும் வினைத்திறனான பசுமைச் செயற்பாடுகளை முன்னெடுக்க SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாப் பகுதிகளிலும், பின்தங்கிய கிராமப் பகுதிகளிலும் சூரிய வலுவில் இயங்கும் கள நிலையங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை SLT-MOBITEL மேற்கொண்டுள்ளது. அதனூடாக சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், இணைப்புகளை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. ஹைபிரிட் பற்றரி கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில், முழு நேர மின்பிறப்பாக்கிகள் இயங்குவதற்கு பதிலாக, இந்த சூரிய வலுவினூடாக, எரிபொருள் பாவனையை குறைத்து, காபன் வெளியீட்டை குறைப்பதற்கு முன்வந்துள்ளது.

வியாபாரத்தின் சூழல் தாக்கத்தினூடாக புவியை பாதுகாப்பதனூடாக, SLT-MOBITEL இனால் இதர சூழலுக்கு நட்பான செயற்பாடுகளான e-கழிவு முகாமைத்துவம், சூரிய வலுவூட்டப்பட்ட பணிச் சூழல், பசுமை வலு சான்றளிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X