2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

SLT-MOBITEL புதிய தொனிப்பொருள் ‘No Dream Too Big’அறிமுகம்

S.Sekar   / 2022 ஜனவரி 21 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது புதிய தொனிப்பொருளான ‘No Dream Too Big' ஐ அறிமுகம் செய்துள்ளது. புதுவருடத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ லங்கா ரெலிகொம் தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வரவேற்பு பகுதியில் இந்த அறிமுகம் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் SLT-MOBITEL சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, SLT பணிப்பாளர் மொஹான் வீரகோன் பிசி, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா, மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென, பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெர்னான்டஸ், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாரம்பரிய முறைகளின் பிரகாரம், தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட்டது. சமயத் தலைவர்கள் பிரசன்னமாகி புதுவருடத்தை முன்னிட்டு நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் ஆசி வழங்கியிருந்தனர். இந்த நிகழ்வின் போது சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களால் பிரதான புத்தாண்டு உரைகள் ஆற்றப்பட்டிருந்தன.

SLT-MOBITEL இன் புதிய மற்றும் பிரத்தியேகமான தொனிப்பொருளான ‘No Dream Too Big’ என்பதன் அறிமுகத்தின் நோக்கம், மக்களுடன் தொடர்பை பேணி, அவர்களின் உள்ளங்களை வெல்வதாக அமைந்துள்ளது.  SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ உரையாற்றும் போது, நிறுவனத்தின் மீது ஊழியர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்ததுடன், 2022 ஆம் ஆண்டில் நிறுவனம் எய்துவதற்கு திட்டமிட்டுள்ள பிரதான செயற்திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்திருந்தார்.

SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்தை பற்றி கருதும் போது நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உங்களின் ஆதரவுடன் எம்மால் 2022 ஆம் ஆண்டில் பெருமளவு சாதிக்க முடியும். SLT குழுமத்தை பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக திகழச் செய்வதுடன், டிஜிட்டல் இலங்கையை சாத்தியப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும். SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் தொழில்நுட்பத்தின் மையத்தில் காணப்படுவதுடன், வழிநடத்திச் செல்லும் செயலணியாக சிறந்த நிலையில் அமைந்துள்ளது. உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்காகவும், எமது சிறந்த நிறுவனத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டுக்காகவும் சகலருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், புது வருடத்திலும் உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

ஒரு வருடத்துக்கு முன்னதாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நாம ஒன்றிணைப்பு இடம்பெற்ற முதல், இலங்கையை டிஜிட்டல் மயமாக்கத்துக்கு உட்படுத்துவதில் பெருமளவு பங்களிப்பு வழங்கியிருந்தது. ஒன்றிணைந்த வழிமுறையினூடாக, SLT-MOBITEL இனால் பல் தரப்பட்ட தொலைத்தொடர்பாடல் அப்ளிகேஷன்கள் மற்றும் தீர்வுகளுடன், ஒன்றிணைந்த தொழில்நுட்பங்களை அணுகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், அதனூடாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையில் தாக்கம் செலுத்தும் தொலைத்தொடர்பாடல் அனுபவங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரத்தியேகமான டிஜிட்டல் அனுபவங்களை கட்டியெழுப்பும் வகையில், SLT-MOBITEL இனால் ஹோம் புரோட்பான்ட் சேவைகளை நிர்வகிப்பதற்கு Amazon Alexa திறன்களை நிர்வகிக்கும் வசதிகளை ஏற்படுத்தியிருந்த முதலாவது இலங்கை நிறுவனமாக அமைந்துள்ளது. மேலும், SLT-MOBITEL இனால் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் one-stop customer support gateway, ‘MySLT App’ என்பது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக விறுவிறுப்பான ஒப்பற்ற சுய-பராமரிப்பு அனுபவங்கள் வழங்கப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டின் அறிமுகத்துடன், SLT MOBITEL தொழில்நுட்பத்தின் மையமாக திகழும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்க்கைகளை மாற்றியமைக்கும் வழிகாட்சியாகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. முன்னர் செயற்படுத்தப்பட்ட தந்திரோபாயத் திட்டங்கள் நிறுவனத்தின் பாரிய வெற்றிகரமான செயற்பாடுகளில் பெருமளவு பங்களிப்பு செலுத்தியுள்ளதுடன், வளர்ச்சி மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர் பராமரிப்பு, விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் சாதனங்கள் போன்ற பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .