2025 ஜூலை 26, சனிக்கிழமை

SLTஇன் பங்குடன் SEA-ME-WE 5 கடலடி கேபிள் முறைமை பூர்த்தி

Gavitha   / 2017 மார்ச் 08 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா டெலிகொம் பிஎல்சி (SLT) மற்றும் SEA-ME-WE 5 கூட்டிணைப்பின் கடலடிக் கேபிள் நிறுவுதல் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20,000 மைல்கள் நீளமான இந்தக் கடலடிக் கேபிள் உட்கட்டுமானம், 16 நாடுகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடலடிக் கேபிள் முறைமையானது, தனது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக மேன்மைக்காக, 2016 நவம்பரில் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற Global Carrier Awards இல் Project of the Year விருதினைப் பெற்றிருக்கிறது.  

தென்கிழக்காசியாவிலிருந்து மேற்கு ஐரோப்பா வரை, 16 நாடுகளுக்கு பரந்துள்ள SEA-ME-WE 5 கடலடிக்கேபிள் முறைமையானது, உலகளாவிய தொடர்பாடலில் ஒரு மைல்கல்லாக குறிக்கப்படவேண்டிய தொழில்நுட்ப திருப்புமுனையாகும். மூன்று இழைய சோடிகளினால், வினாடிக்கு 24 ரெறாபைட்ஸ் கொள்ளளவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த முறைமையானது, internet of things (IoT), enterprise data exchange, internet TV மற்றும் online gaming போன்றவற்றுக்கான எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றக் கொள்ளளவைக் கொண்டதாகவிருக்கும்.  

SEA-ME-WE 5 கடலடிக்கேபிளின் மேம்பட்ட 100Gbps தொழினுட்பமானது, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான அலைவரிசைத்தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக 4 மடங்கு கொள்ளளவை வழங்கி, அதிகூடிய வலையமைப்பு போக்குவரத்துள்ள ஐயோப்பா-ஆசியா வலையமைப்புப் பாதையை மேலும் விரிவாக்கும் சக்தியைக் கொண்டுள்ளது.  

பிற கடலடிக்கேபிள் முறைமைகளைப் போலல்லாது, SEA-ME-WE 5 இன் பிரதான இறுதி முனைகள் கேபிள் தரையேற்ற நிலையங்களாகவன்றி (Cable Landing Stations), carrier-neutral/open Points-of-Presence (PoPs) ஆகவுள்ளன.  

SE-ME-WE 5 கூட்டிணைப்பின் முகாமைத்துவக் குழுவின் தலைவரான லினட் லீ, இந்த வரலாற்றுத் திருப்புமுனை பற்றிக் குறிப்பிடுகையில், “SE-ME-WE 5 செயற்றிட்டம் பூர்த்தி செய்யப்பட்டமையானது, உலகெங்குமுள்ள தரவுப் பாவனையாளர்களது முறைமைகள் புதுப்பிக்கப்படுவதில் ஒரு சாதனையாக் கருதப்படுகிறது” என்கிறார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X