2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘SMARTChat – வாடிக்கையாளருடன் ஒரு மணி நேரம்’ திட்டம் அறிமுகம்

Freelancer   / 2024 நவம்பர் 08 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL Enterprise, ‘SMARTChat - வாடிக்கையாளருடன் ஒரு மணி நேரம்’ என்ற புதுமையான ஈடுபாடுமிக்க கருத்தாக்கத்துடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு (SME) ஆதரவளிக்கும் முகமாக புதிய தளத்தை உருவாக்குகிறது. இம்முன்னோடித் திட்டம் தனிப்பட்ட வாடிக்கையாளருக்காக வடிவமைக்கப்பட்ட தொடர் ஆலோசனை அமர்வுகள் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்குகிறது. இது நாட்டின் SME வணிக சமூகத்தில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்த SLT-MOBITELஇன் அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க அடுத்த கட்ட நகர்வாகும்.

SLT-MOBITELஇன் 'SMARTChat'இன் முக்கிய இலக்கானது, புதிய தொழில்நுட்பத்தை எளிதாக ஏற்றுக்கொளல், டிஜிட்டல் மயமாக்கல், வணிக வளர்ச்சி மற்றும் செலவுக் குறைப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் டிஜிட்டல் வெற்றிக்கான வரைபடத்தை SMEகளுக்கு வழங்குவதாகும். அவர்களின் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதற்கு மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு என தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்தத் துறையானது டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஊடாக அவர்களின் முழுத் திறனையும் அடைய உதவும்.

இந்த SMARTChat அமர்வுகள் SMEகளுக்கு நிபுணர் ஆலோசனைக்கான பிரத்தியேக அணுகல் மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவை வழங்குகின்றன. இது பெரும்பாலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் தங்கள் செயற்பாடுகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த வணிகங்களிற்கு உதவும்.

இற்றை வரை, SMARTchat அமர்வுகள் கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளன. இந்த புதுமையான முயற்சிகளால் சமூகங்கள் பயனடைவதை இந்த நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன. முழு நாட்டையும் உள்ளடக்கியவாறான மேலும் பல அமர்வுகள் எதிர்காலத்தில் நடாத்தப்படும்.

நிகழ்வுகளில் SMEகள் SLT-MOBITELஇன் தொழில்நுட்ப நிபுணர்களுடன் தனித்தனியாக கலந்தாலோசிக்கும் சிறப்புரிமையைப் பெற்றனர். பங்கேற்பாளர்கள் SLT-MOBITELஇன் பரந்த SME தயாரிப்புகளிலிருந்து தங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருத்தமான தீர்வுகளின் செயல்விளக்கங்களையும் பெற்றனர். இதன் மூலம் ஒவ்வொரு வணிகமும் வெற்றிபெறத் தேவையான வழிகாட்டுதலைப் பெற்றுள்ளன என்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த முயற்சியானது, இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமான SME துறையுடனான தொடர்பை ஆழப்படுத்துவதற்கான SLT-MOBITELஇன் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். SMEகளை வலுப்படுத்துவது இறுதியில் அவர்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்பதை SLT-MOBITEL திடமாக நம்புகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X