2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

STEMUP உடன் SLT-MOBITEL கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஜூன் 18 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

STEMUP கல்வி மய்யத்துடன் கைகோர்த்து Hack:bit 2020 மெய்நிகர் பாடசாலைகளுக்கிடையிலான மற்றும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான hackathon ஐ முன்னெடுக்க SLT-MOBITEL ஆதரவளித்துள்ளது. இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்க நிறுவனம் முன்வந்துள்ளது. Hack:bit 2020 இன் மாபெரும் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றதுடன், பாடசாலை மற்றும் பல்கலைக்கழப் பிரிவுகளில் பங்கேற்று வெற்றியீட்டியவர்களுக்கு 1.5 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

மெய்நிகர் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட Hack:bit 2020 இனூடாக மாணவர்களுக்கு புரட்சிகரமான தயாரிப்பினூடாக தமது புத்தாக்கமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அத்துடன் பங்குபற்றுநர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தவும், தமது சிந்தனைகளை வெற்றிகரமான தயாரிப்பாகவும் வடிவமைப்பதற்கு வழிகோலியிருந்தது. இந்த நிகழ்வின் போது சிறுவர்களுக்கு வெபினார் ஊடாக STEMUP கல்வி தொடர்பில் விளக்கங்களையும் SLT-MOBITEL வழங்கியிருந்தது.

இந்தப் பங்காண்மை தொடர்பாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “STEMUP மய்யத்துடன் கைகோர்த்து இந்த நிகழ்வை முன்னெடுக்க முடிந்தமை உண்மையில் பெரும் பேறாக அமைந்துள்ளது. தேசிய சேவை வழங்குநர் எனும் வகையில், தேசத்தின் தொழில்நுட்பசார் பொருளாதாரத்தை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்க முடிந்தமை தொடர்பில் SLT-MOBITEL பெருமை கொள்கின்றது. Hack:bit 2020 போன்ற திறன்காண் போட்டியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் இளம் திறமைசாலிகள் தமது ஆக்கத்திறன்களை வெளிப்படுத்துவதை காண முடிந்தமை உண்மையில் வெகுமதியான அனுபவமாகும்.” என்றார்.

Hack:bit 2020 பங்குபற்றுநர்களுக்கு துறைசார் நிபுணர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அவர்களின் சிந்தனைகளை மேம்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. இந்தப் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவினர் மதிப்பாய்வு செய்திருந்ததுடன், இதன் போது சிந்தனை, புத்தாக்கம், செயற்படுத்தல், வியாபாரப் பெறுமதி மற்றும் நிலைபேறாண்மை போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தனர். உள்நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் கல்விசார் நிபுணத்துவ அனுபவத்தைக் கொண்ட நடுவர்கள் இந்தக் குழாமில் உள்ளடங்கியிருந்தனர். STEMUP கல்வி மய்யத்தின் பணிப்பாளர் பிரபாத் மான்னப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், “2018 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, Hack:bit 2020 இற்கான பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். Hack:bit 2020 இனூடாக மாணவர்களுக்கு விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் கணித சார் (STEM) கற்கை விடயங்களுக்கு பெருமளவு ஈடுபாட்டை பேணுவதற்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் தமது புத்தாக்கமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .