2025 மே 22, வியாழக்கிழமை

Samsung Galaxy S9 மற்றும் S9+ அறிமுகம்

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Samsung Electronics இன் Samsung Galaxy S9 மற்றும் S9+ இப்பொழுது இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படங்கள், வீடியோக்கள் மற்றும் இமேஜ்கள் மூலம் வாடிக்கையாளரின் பகிர்வுகளுக்கு, தொடர்பாடல்களுக்கு, அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தல் தேவைகளை புரிந்து கொண்டுGalaxy S9 மற்றும் S9+ இன் மேம்படுத்தப்பட்ட கமராக்கள் மூலம் புத்தாக்கத்தை உறுதி செய்கிறது.

மீள் வடிவமைக்கப்பட்ட ‘டுயல் அபர்ச்சர் லென்ஸ்’ புதுமையான  குறைந்த ஒளியிலான கமராவுக்கு உதவுகிறது.Super Slow-moவீடியோ வசதிகள் மற்றும் தனித்துவமாக்கப்பட்டAR Emoji ஆகியனGalaxy S9  இதன் சிறப்புகளாகும்.  

Samsung Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹென்பே பார்க் கருத்து தெரிவிக்கையில், “படங்கள், வீடியோக்கள். இமேஜ்கள் மூலம் தனித்துவத்தன்மை தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படும் இக்காலத்தில், நாம் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையிலான திறன்பேசியை S9 மற்றும் S9+ ஊடாக மீண்டும் புதுப்பித்துள்ளோம்.  Samsung Sri Lanka அண்மையில் People’sவிருதுகளில் இவ்வருடத்துக்கான விரும்பப்படும் வர்த்தக நாமம் என்ற விருதை வென்றது. இது இலங்கையர்களுக்கிடையில் சம்சுங் இற்கு வளர்ந்து வரும் புகழை எடுத்துக்காட்டுகிறது. இவ்விருதை வெல்வதற்கு எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களித்த எமது வாடிக்கையாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் முதலிடம் வகிக்கும் வர்த்தக நாமமாக சந்தையில் முன்னணி வகிப்போர் என்ற வகையில் எமது நோக்கமானது ‘நீங்கள் செய்ய முடியாததை இன்றே செய்திடுங்கள்’ என இலங்கையர்களை வலுப்படுத்துவது ஆகும்” எனக் கூறினார்.

Galaxy S9 மற்றும் S9+ ஆனது மேம்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குகிறது. AKGயின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Dolby Atmos உடனான ஓடியோ, edge-to-edge Infinity Display ஆகியவற்றை சம்சுங்கின் பாரம்பரியம்மிக்க வடிவமைப்பைக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X