Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 17 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு நட்சத்திரத் தரம் வாய்ந்த Michelin Chef , Michel Roth போன்றவர்களின் உற்பத்திகளை Delifrance மற்றும் Delifrance நிறுவனத்தின் உத்தியோகபூர்வ துணை நிறுவனமான Softlogic Restaurants (Pvt.) Ltd என்பன இலங்கையில் அறிமுகம் செய்துள்ளன.
Softlogic Holdings PLC நிறுவனத்தின் உரிமம் பெற்ற ஒரு துணை நிறுவனமாக Softlogic Restaurants (Pvt.) Ltd திகழ்கிறது. பிரென்ஞ் வாழ்க்கை முறையை உள்நாட்டு வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில், இத்தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Chef Roth தனது குறுகிய கால இலங்கை விஜயத்தின் போது ஊடகவியலாளர்களையும் Delifrance வாடிக்கையாளர்களையும் சந்தித்து தனது சமையல் திறனை நிரூபித்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
பரிஸில் உள்ள Delifrance $lL நிறுவனத்தில் சந்தைப்படுத்தல், செயற்பாடுகளுக்கான பிரதான அதிகாரி Fabrice Herlax கருத்துத் தெரிவிக்கையில், “Softlogic மற்றும் Delifrance நிறுவனங்களின் நிபுணத்துவம் மிக்க அதிகாரிகளின் உதவியோடு, இலங்கையில் எமது வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் கொழும்பில் எமது புதிய நிலையங்கள் காணப்படும். மேலும், எமது விருந்தினர்களுக்கு அதி உன்னத உணவு மற்றும் குடிபானங்களை புதிதாக திறக்கப்பட இருக்கும் “Next Generation” நிலையங்கள் மூலமாக வழங்க இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.
“Chef. Roth அவர்களின் இலங்கை விஜயமானது உரிமம் பெற்ற துணை நிறுவனங்களான Softlogic மற்றும் Delifrance என்பவற்றின் சக்திமிக்க உறவை உறுதிப்படுத்துகிறது. அத்தோடு Delifrance நிறுவனமானது இலங்கைச் சந்தையைத் தமது தனித்துவமான French Baker’s உணவுப் பொருட்களுக்காக விரிவுபடுத்தக்கூடிய மிகப் பாரிய சந்தையாகப் பார்க்கின்றது. மிக வேகமாக நகரமயமாக்களுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நம்நாட்டின் வாடிக்கையாளர்கள் புதிய தனித்துவமான உணவு வகைகளை அனுபவிப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் Delifrance நிறுவனமானது, பிரான்ஸ் சமையல் மற்றும் Cafe கலாசாரம் என்பவற்றின் மூலம் கொழும்பு நகரத்தின் சந்தையை மிகப் பொருத்தமான முறையில் இலக்கு வைக்கின்றது” என Softlogic Holdings PLC நிறுவனத்தின் கூட்டு சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் Desiree Karunarathna குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago