2025 ஜூலை 30, புதன்கிழமை

TRAIL நடைபவனி நிதி திரட்டும் முயற்சிக்குலங்கா ஐஓசி பங்களிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 02 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐஓசி பிஎல்சி, TRAIL நடைபவனி நிதிச் சேகரிப்பு முயற்சிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த நன்கொடைக்கான காசோலையை லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷியாம் போஹ்ரா, மஹேல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரிடம் கையளித்து வைத்திருந்தார். 

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷியாம் போஹ்ரா இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,  “போற்றத்தக்க ஒரு நற்காரியத்துக்கான முன்னெடுப்பில் பங்குபற்றும் பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைக்க உதவுகின்ற TRAIL நடைபவனி போன்று பொதுமக்கள் மத்தியில் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதில், நாம் ஆர்வத்துடன் உள்ளோம்” என்றார். 

காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிக்கும் நோக்கில், 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது அண்ணளவாக ரூ. 735 மில்லியன் தொகையை திரட்டுவதே, இந்த நடைபவனியில் கலந்துகொண்டவர்களின் நோக்கமாக அமைந்தது. 2011ஆம் ஆண்டில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட TRAIL நடைபவனி முதலில் நாட்டின் தென்பகுதியிலிருந்து ஆரம்பித்து 27 தினங்களாக பயணித்து, மொத்தமாக 670 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வட பகுதியில் நிறைவடைந்திருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .