Freelancer / 2025 மே 30 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மட்ட சூழல் மற்றும் சமூக சவால்களுக்கு தொழினுட்பசார் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்த TechNovation 2025 இன் இறுதிப் போட்டியை SLT-MOBITEL வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL இனால் ESG தலைமைத்துவமளிக்கப்பட்ட நடவடிக்கையாக TechNovation 2025 அறிமுகம் செய்யப்பட்டதுடன், வர்த்தக நாமத்தின் இணை-இணைப்பு கொள்கையின் கீழ், புத்தாக்கமான தொழினுட்ப தீர்வுகளினூடாக தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. நிலைபேறான விருத்தி மற்றும் சமூக தாக்கம் போன்றவற்றுக்கு தொழினுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தின் பரந்த நோக்குடன் பொருந்தும் வகையில் இந்த சிந்தனை வெளிப்பாட்டு நிகழ்வு அமைந்திருந்தது.
பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து 50க்கும் அதிகமான விண்ணப்பங்களை இந்த நிகழ்வு பெற்றிருந்தது. யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி மற்றும் ஒலுவில் ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்களாக இந்த மாணவ சிந்தனையாளர்கள் அமைந்திருந்தனர். பல கட்டங்களில் இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டதுடன், 15 அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்ததுடன், அதிலிருந்து சிறந்த 8 அணியினர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியிருந்தனர்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Team Zurazen அணி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. புத்தாக்கமான e-கழிவு முகாமைத்துவ அப்ளிகேஷனுக்காக அவர்கள் வெற்றியாளராக தெரிவாகியிருந்தனர். இரண்டாமிடத்தை Team Spark Squad பெற்றுக் கொண்டனர். தன்னியக்கமாக நீர் துர்நாற்றம் அகற்றும் தீர்வை இவர்கள் வடிவமைத்திருந்தனர். மூன்றாமிடத்தை Team Spam Bytes பெற்றுக் கொண்டனர். ‘Suwadiviya,’எனும் சகல அம்சங்களையும் கொண்ட மருத்துவ கட்டமைப்பை வடிவமைத்திருந்தனர். மேலதிக நிதிவசதியளிப்புடன், Team Zurazen தமது சிந்தனை வெளிப்பாட்டை முழுமையாக இயங்கும் தீர்வாக வடிவமைப்பர். இந்த நிகழ்வு SLT-MOBITEL தலைமையகத்தில் நடைபெற்றது.
e-கழிவு முகாமைத்துவம், கடல் பாதுகாப்பு, மனித-ஆனை முரணை கட்டுப்படுத்தல் மற்றும் சமூக பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் திறந்த சிந்தனை பிரிவு என நான்கு பிரதான பிரிவுகளில் பங்குபற்றுனர்களுக்கு தமது புத்தாக்கங்களை வடிவமைப்பதற்கு இந்த போட்டியினூடாக சவால்விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் இளம் திறமைசாலிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிஜ உலக சவால்களை கையாள்வதற்கு வலுவூட்டுவதில் SLT-MOBITEL உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. அதனூடாக, தொழினுட்பத்தினூடாக தேசிய மட்டத்தில் தீர்வுகளை வடிவமைக்கக்கூடிய புத்தாக்க செயற்பாட்டாளர்கள் தலைமுறையை கட்டியெழுப்ப உதவத் திட்டமிட்டுள்ளது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026