Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 02 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்றிட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்படுத்திக்கொள்ள டோக்கியோ சீமெந்து அனுசரணை வழங்கும். முல்லைத்தீவின் யோகபுரம் மகாவித்தியாலயம், தேரன்கண்டல் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் 140 மாணவர்கள் மற்றும் குருநாகலின் குணாநந்த மகாவித்தியாலயத்தின் 50 மாணவர்கள் ஆகியோர் இந்த ஒன்றிணைவினூடாக 2017 முழுவதும் பயன்பெறவுள்ளனர்.
இந்த அனுசரணை வழங்கும் பங்காண்மை தொடர்பான நிகழ்வில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “The Music Project என்பது இசை பயில ஆர்வமாக உள்ள சிறுவர்களை இணைப்பதன் ஊடாக சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்க்கின்றனர். இசையில் மட்டுமின்றி, இந்தத் திட்டத்தினூடாக ஏனையவர்களுக்கு மதிப்பளிப்பதனூடாக, சிறந்த பெறுமதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது” என்றார்.
தற்போது ஐந்தாவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் The Music Project என்பது நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த பின்தங்கிய நிலையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இசையைப் பயில்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த மாணவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், முல்லைத்தீவு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் வதிவிட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
முல்லைத்தீவு, மல்லாவி தேரன்கண்டல் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னதாக இசைப்பயிற்சிகளை பெறுகின்றனர்.
The Music Project ன் காப்பாளர் ஷலினி விக்ரமசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “வெனிசுலாவின் El Sisitema வை அடிப்படையாகக் கொண்ட “The Music Project” என்பது இசையை வித்தியாசமான கற்பித்தல் முறையினூடாக பயில வழிவகுக்கிறது. இசைக்கருவிகளை பயில்வது என்பது ஒன்றிணைவு, ஆக்கத்திறன், வினைத்திறனின் உணர்வு மற்றும் அவற்றினூடாக நம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை வழங்குகின்றது என நாம் கருதுகிறோம். இணைக்கும் மொழி என்பது இன்மையால், இசை என்பது அந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதாக நாம் கருதுகிறோம். வடக்கு மற்றும் தெற்கில் இந்த நிகழ்ச்சி இரு இடங்களில் முன்னெடுக்கப்படுகிறது. உலக இசைச் சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் வகிப்பதாக உள்நாட்டு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவர்கள் உணர்வார்கள்” என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago