2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

Trail 2016 க்கு SDB வங்கி அனுசரணை

Gavitha   / 2016 நவம்பர் 15 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

Trail 2016 சமூக சேவை நிகழ்ச்சித் திட்டத்துக்கு அனுசரணையாளராக, தனது பங்களிப்பைப் பெற்றுக்கொடுக்க SDB வங்கி முன்வந்திருந்தது. பருத்தித்துறையில் இருந்து தெவுந்தர முனை வரை, தொடர்ந்து 28 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த புற்றுநோய்க்கான நடைப்பயணத்தின் இறுதித் தினத்தில் SDB வங்கியும் இணைந்து கொண்டது. வங்கியின் மாத்தறை கிளைக்கு அருகிலிருந்து வங்கியின் முகாமைத்துவம் உட்பட ஊழியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கைகோர்த்து இதில் பங்கெடுத்துக் கொண்டனர். மக்கள் வியாபாரம் ஒன்றின் மூலம் உருவான ஒரு நிதி நிறுவனமான SDB வங்கி, இவ்வாறான சமூக சேவை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தனது பங்களிப்பைப் பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளது.  

SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்ற ஒரு விசேட வங்கியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிதி நிறுவனமாகவும் அது செயற்பட்டு வருகிறது. அது, ஸ்ரீ லங்கா Fitch Rating நிறுவனத்தின் BB+ (stable) தரப்படுத்தலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 88 கிளைகளைக் கொண்டு செயற்படுவதோடு, பிரதேச வாழ் வாடிக்கையாளர்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும் தேவையான நிதி சக்தியைப் பெற்றுக்கொடுத்து வருகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .