Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 04 , மு.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியத Mr. World Sri Lanka 2018 நிகழ்வு, புகழ்பெற்ற ஆடவர் ஆடைகள் வர்த்தக நாமமான Vantage இணை அனுசரணையில், கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், போட்டியாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதன் Mr. World Sri Lanka 2018 வெற்றியாளராக மனோஜ் டி சில்வா தெரிவு செய்யப்பட்டிருந்தார். மாபெரும் இறுதிப் போட்டியில் போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்பு பொதியை Vantage வழங்கியிருந்தது.
இறுதிப் போட்டியில் 18 போட்டியாளர்கள் தேசிய ஆடை, கறுப்பு கழுத்துப்பட்டி, வெள்ளைச் சட்டை மற்றும் நிபுணத்துவ மொடெல் போன்ற பிரிவுகளில் போட்டியிட்டிருந்தனர். இவற்றுக்கு Vantage அனுசரணை வழங்கியிருந்தது.
Mr. World Sri Lanka 2018 நிகழ்வுக்கு Vantage இணை அனுசரணை வழங்கியிருந்தமை தொடர்பில் Ebony ஹோல்டிங்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ரஸ்மி ரஹீம் கருத்துத் தெரிவிக்கையில், “உலகில் அதிகளவு நேசிக்கப்படும் ஆண்மகனை இனங்காணும் வகையில் இடம்பெற்ற இந்த போட்டியில், Vantage போன்ற உயர் தரம் வாய்ந்த ஆடை வர்த்தக நாமம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே, Mr. World Sri Lanka 2018 போட்டிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். போட்டி விறுவிறுப்பாகவும், கடுமையானதாகவும் அமைந்திருந்தது. Mr. World Sri Lanka 2018 ஆக தெரிவாகியிருந்த மனோஜ் டி சில்வாவுக்கு நாம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்பாட்டாளர்கள், போட்டியாளர்களின் அர்ப்பணிப்பால் இந்த நிகழ்வு வெற்றிகரமானதாக அமைந்திருந்தது” என்றார்.
இலங்கையில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற ஆடவர் வர்த்தக நாமமாக Vantage திகழ்கிறது. இலங்கையின் முன்னணி ஆடை விநியோகத்தரான Ebony ஹோல்டிங்ஸின் தயாரிப்பாக இது அமைந்துள்ளது.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025