2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

AMW சந்தையில் அறிமுகப்படுத்தும் மரதன் ரேடியல்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் நிறுவனம், தனது ரிடிரெடிங் டயர் தெரிவுகளில் புதிய உள்ளடக்கங்களாக மரதன் ரேடியல் தெரிவுகளை உள்ளடக்கவுள்ளது. இந்த புதிய டயர்கள் தெரிவு அறிமுக நிகழ்வில் நிறுவனத்தின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் சமந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றிருந்தார்.  
 
மரதன் ரேடியல் என்பது நிறுவனத்தின் பிரதான இலட்சியமான உற்பத்தி கொள்ளளவை அதிகரிப்பது என்பதற்கு அமைவாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் ரேடியல் டயர்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் தரத்தை மேம்படுத்தி அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய தயாரிப்பு அமையவுள்ளது. 
 
AMW நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ். ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், நாட்டின் முன்னணி டயர் உற்பத்தியாளர் எனும் வகையில், இந்த தயாரிப்பை AMW நிறுவனம் அறிமுகம் செய்திருந்ததன் முக்கியத்துவத்தை விளக்கியிருந்தார். 
'AMW நிறுவனத்தின் பிரதான ரேடியல் டயர் சந்தையில் புதிய உள்ளடக்கம் என்பது விற்பனைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், உயர் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் உற்பத்தி கொள்ளளவை முழுமையாக பயன்படுத்தும் தன்மை ஆகியனவும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எமது சந்தை ஆதிக்கத்தை மேலும் உயர்த்தும் வகையில் இது அமைந்திருக்கும்' என்றார்.  
 
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'மரதன் ரேடியல் டயர் என்பது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இது நீடித்த உழைப்பு, மேம்படுத்தப்பட்ட உறுதித் தன்மை ஆகியவற்றை போக்குவரத்துக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. எந்த விதமான பாதைக்கும் உகந்த வகையிலான சிறந்த உராய்வுத் தன்மையை கொண்டுள்ளது. மேலும், இந்த தயாரிப்பு என்பது கவர்ச்சிகரமான மற்றும் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. எனவே, இலங்கை சந்தையில் காணப்படும் சிறந்த முதல் தர ரேடியல் டயராக மரதன் ரேடியல் டயர் அமைந்துள்ளது என்பதை நான் தெரிவித்தக் கொள்கிறேன்' என்றார். 
 
AMW உற்பத்தி செய்யும் ரிடிரெடிங் டயர் வர்த்தக நாமங்களில் மரதன் DAG, மரதன் ரேடியல், மரதன்  High-Miler, AMW OTR மற்றும் aDag போன்றன உள்ளடங்கியுள்ளன. கம்பனி இதற்கான சிறந்த ஆற்றலை கொண்டுள்ளதுடன், எந்தவொரு ரிம் அளவுக்கும் ஏற்ற வகையில் ரிடிரெட் டயர்களை உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இலங்கையில் Vacu-leg மற்றும் Die-Hard ரிடிரெட் டயர்களை உற்பத்தி செய்யும் ஆற்றலை AMW கொண்டுள்ளது. களுத்துறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதியில் இரு பெரும் தொழிற்சாலைகளை AMW கொண்டுள்ளது. சகல உற்பத்திகளுக்கும் ISO 9001-2008 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சூழல் பாதுகாப்பு தரச் சான்றான 14001-2004 என்பதும் வழங்கப்பட்டுள்ளது. 
 
AMW என்பது 65 ஆண்டு காலமாக தனது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிறுவனம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பல்தேசிய குழுமமான Al-Futtaim குழுமத்தின் முழுமையான உரிமையை கொண்ட அங்கத்துவ கம்பனியாகும். Al-Futtaim குழுமம் என்பது, ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக, தொழிற்துறைசார் மற்றும் சேவை நடவடிக்கை, வாகனங்கள், இலத்திரனியல், காப்புறுதி, சேவைகள், றியல் எஸ்டேட் எனவும் வெளிநாட்டு செயற்பாடுகளின் மூலம் வழங்கி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X