
Inspiro Business School (Pvt) Ltd என்பது இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவகத்தின் (CA ஸ்ரீலங்கா) பதிவு செய்யப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த கணக்கியல் கல்வியகம் எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நுகேகொட பகுதியில் அமைந்துள்ள Inspiro, 'சக்யா' எனும் இலங்கையின் புகழ்பெற்ற கல்வியகத்தின் அங்கத்துவ நிறுவனமாக திகழ்கிறது.
இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவகத்தின் (CA ஸ்ரீலங்கா) தலைவரான அர்ஜுன ஹேரத் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை Inspiro Business School (pvt) Limited இன் தலைவரான பண்டார திசாநாயக்க அவர்களிடம் கையளித்திருந்தார். இந்த நிகழ்வு CA ஸ்ரீலங்காவில் அண்மையில் இடம்பெற்றி;ருந்தது.
Inspiro Business School என்பது திறமை வாய்ந்த அனுபவம் பெற்ற விரிவுரையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவகத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடவிதானத்தை பின்பற்றி பயிற்றுவிக்கும் வகையில் இவர்கள் அமைந்துள்ளனர். பட்டைய கணக்காளர் பாடவிதானத்தை பயிற்றுவிப்பதில் சிறந்த வெளிப்படைத்தன்மை மற்றும் அனுபவத்தை கொண்டுள்ள இந்த ஆளணி மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை ஊக்குவித்து சிறந்த பெறுபேறுகளை வழங்கக்கூடிய பட்டைய கணக்காளர்களாக தயார்ப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Inspiro என்பது எஸ் டி எஸ் ஜயசிங்க மாவத்தை, நுகேகொட பகுதியில் அமைந்துள்ள 'Seagis' பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. நவீன வசதிகளை கொண்டுள்ள இந்த கல்வியகம், கணனிகள், நூலகம் ஆகியவற்றையும் மாணவர்களின் வசதி கருதி தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும், விரிவுரைகள் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாடவிதானத்துக்கமைய முதலாம் நிலைக்கான விரிவுரைகள் (நிறைவேற்று நிலை) விரிவுரைகள் 2014 செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளன.
CA ஸ்ரீலங்காவின் அங்கீகாரத்தை Inspiro Business School பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் கல்வியகத்தின் தலைவர் பண்டார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவகம் என்பது Inspiro Business School மூலம் வழங்கப்படும் உறுதியான கல்வித்திட்டங்கள், வசதிகள் மற்றும் தரமான கல்விச் சேவைகளை இனங்கண்டு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது' என்றார்.
இந்த சான்றை பெற்றுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். பட்டைய கணக்காளர்களாக திகழ விரும்பும் இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் மிகவும் ஒரு முகப்படுத்தப்பட்ட வழிகாட்டலை பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பாடவிதானம் என்பது நிபுணத்துவம் வாய்ந்த வகையில் சரியான முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். Inspiro Business School என்பது இதை நோக்கமாக கொண்டமைந்துள்ளது, திறமை வாய்ந்த வளவாளர்களின் மூலம் இந்த இலக்கு எய்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது' என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 'Inspiro வுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்பது, மாணவர்களுக்கு மிகவும் சிறந்த நற்செய்தியாக அமைந்துள்ளது' என்றார்.