2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

Clogard அறிமுகப்படுத்தும் புதிய Cavity Free பற்பசை

George   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


தரமான உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனமாக ஹேமாஸ், Clogard  Cavity Free  தயாரிப்பை நேற்று புதன்கிழமை (06) அறிமுகப்படுத்தியது.

Cinnamon Lakeside Hottel இல் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தரபண்டார, இலங்கை பல்மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் திலீப் டி சில்வா, ஹேமாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோய் ஜோசப், மற்றும் விளம்பர பிரிவு முகாமையாளர், உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை மக்களில் நம்பிக்கையை வென்ற Clogard  பற்பசையானது, இலங்கை மக்களிடையே தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள பற்குழிவடைதல் பிரச்சினைக்கு தீர்வாக Clogard   Cavity Free உற்பத்தியை சந்தையில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

பற்குழிவடைதல் பிரச்சினையானது இலங்கை மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் இதன் காரணமாக மக்கள் பல்வேறு சுகாதார கேடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக, பற்குழிவடைதல் ஒரு தேசிய பிரச்சினை என்ற தலைப்பில் உரையாற்றிய சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

பற்குழிவடைதல் பிரச்சினையானது 1980 ஆண்டளவில் இருந்து பாரிய பிரச்சினையாக தேசிய ரீதியில் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

புற்குழிவடைதல் காரணமாக இலங்கை சனத்தொகையில் பெருமளவிலானோர் தமது சிறுவயதிலேயே பற்களை இழக்க நேரிடுவதுடன் வயது அதிகரிக்கும் போது, குறிப்பாக 65 வயதாகும் போது ஒரு பல் கூட இல்லாதவர்களில் எண்ணிக்கை 22 சதவீதமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பற்குழிவடைதல் பிரச்சினைக்கு தீர்வாக, பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள Clogard  Cavity Free பற்பசை சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X