2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

Close-up Red Hot Valentines Party

A.P.Mathan   / 2013 மார்ச் 01 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனிலீவர் நிறுவனத்தின் இளைஞர்களுக்கான வாய்ச்சுகாதார தயாரிப்பான குளோசப் வர்த்தகநாமமானது, Excel Worldஇல் நடைபெற்ற 'Closeup Red Hot Valentines Party' க்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந் நிகழ்ச்சியானது பாவனையாளர்களுடனான உறவினை வலுப்படுத்தும் நோக்கிலும், வெகுமதிகளை வழங்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்ச்சியில் பாத்தியா மற்றும் சன்துஷ், துஷ்யந்த் வீரமன், ரொஷான் ரணவன, லஹிரு பெரேரா, சாரங்க திசசேகர மற்றும் பல உள்நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும்; பல்வேறு விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன், இந் நிகழ்ச்சி 350 காதலர்களை கவர்ந்திருந்தமை விசேட அம்சமாகும். மேலும் இந் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சியான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் குளோசப் வர்த்தகநாமத்தின் மூலம் 'Close-up fresh point' கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

'நாம் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். காதலர்களாக நாம் கொண்டாடிய காதலர் தின நிகழ்ச்சிகளில் மிகச்சிறந்தது Closeup red hot Party ஆகும். எமது நேரத்தை ரொமாண்டிக்கான அமைப்பில் செலவிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த குளோசப் வர்த்தகநாமத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்;' என ஹொரன பிரதேசத்தைச் சேர்ந்த டில்ஹானி மற்றும் நிஷாந்த தெரிவித்தனர்.

'இளைஞர்கள் நெருங்கிப் பழகுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் இலங்கையின் ஒரேயொரு வாய்ச்சுகாதார தயாரிப்பாக குளோசப் உள்ளது' என யுனிலீவர் நிறுவனத்தின் வாய்ச்சுகாதார பிரிவின் தலைவர் மனோஜி தாபரே தெரிவித்தார். இலங்கையில் குளோசப் வர்த்தகநாமத்தின் முதலாவது ஆண்டு பூர்த்தியை காதலர் தினத்தன்று கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இவ் ஒருவருடக்; காலத்தில்; பேஸ்புக்கில் 36,000 ரசிகர் வட்டாரத்துடன் குளோசப் வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குளோசப் வர்த்தகநாமத்தின் உதவி வர்த்தகநாம முகாமையாளரான முனாஸா ரஃபீக் கருத்து தெரிவிக்கையில், 'நீடித்து நிலைத்திருக்கும் குளோசப் புத்துணர்ச்சி சுவாசமானது நெருங்கிப் பழகுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இவ்வாண்டு Closeup Red Hot Valentine’s Day Party இன் மூலம் தம்பதிகள் மேலும் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தோம். தம்பதியரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்நிகழ்வை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெகுமதியாக பங்கேற்ற பல தம்பதிகளிடமிருந்து சாதகமான பின்னூட்டல்கள்; கிடைத்தன. மேலும் இவ்வாண்டில் ஆச்சரியமூட்டும் பல திட்டங்களை குளோசப் முன்னெடுக்கவுள்ளது. நெருங்கிப் பழகுவதற்கான தன்னம்பிக்கையை வழங்கும் அத் திட்டங்கள் குறித்த தெளிவுப்படுத்தல்களை பெற்றுக்கொள்ள குளோசப் பேஸ்புக் ஊடாக இணைந்து கொள்ளுங்கள்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .