
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக CODEFEST இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து, 2014ஆம் ஆண்டிலும் CODEFEST நிகழ்வை SLIIT இன் கணினி பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த போட்டிகள், நாடு முழுவதும் மென்பொருள் போட்டியாக இடம்பெற்றிருந்தது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மென்பொருள் வடிவமைப்பு ஆளுமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த பிரபலமான நிகழ்வுக்கு, கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கிளை கொள்கை பங்காளராக கைகோர்த்துள்ளது.
போட்டியாளர்கள் இந்த மென்பொருள் அபிவிருத்தி போட்டி, புதிர் போட்டி மற்றும் ஹெகதொன் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். இந்த போட்டிகளுக்கு சமாந்தரமாக தகவல் தொழில்நுட்ப கருத்தரங்குகள் கல்வி அமைச்சுடன் இணைந்து SLIIT ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பாடசாலை பிரிவினருக்கான போட்டி என்பது, விளையாடுபவருக்கு கல்விசார் பெறுமதி ஒன்றை வழங்கக்கூடிய கணனி போட்டியொன்றை வடிவமைப்பது என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆரம்ப கட்ட போட்டியை தொடர்ந்து, மாபெரும் இறுதிப் போட்டிக்காக ஐந்து அணிகள் தெரிவு செய்யப்படுவார்கள். முதல் மூன்று அணிகளுக்கும் விருதுகளும் 70000, 50000 மற்றும் 30000 ரூபா பெறுமதி வாய்ந்த பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. பணப்பரிசுகளுக்கு மேலதிகமாக மக்கள் விருதும் ICT quiz போட்டியில் பங்குபற்றும் சிறந்த அணிக்காக வழங்கப்படவுள்ளது. வினாக்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் என்பவற்றை பொறுத்து அமைந்திருக்கும். முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு தலா 20000, 15000 மற்றும் 10000 ரூபா வீதம் வழங்கப்படும். அடுத்த சிறந்த ஐந்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
CODEFEST 2013 அணியின் பிரதான அனுசரணையாளர்களாக வொலியும் லிமிடெட், செல்சிட்டி லிமிடெட் மற்றும் ஐஃஎவ்எஸ் பிரைவேற் லிமிடெட் ஆகியன வழங்கியிருந்ததுடன், ஷெஃபீல்ட் ஹலாம் யுனிவர்சிட்டி, வேர்டூசா, லிங்க் நெச்சுரல், லாஃவ்ஸ் ஹோல்டிங், எம்ஐரி, சோன் 24, 99X டெக்னொலஜிஸ் மற்றும் இலங்கை வங்கி ஆகியன இணை அனுசரணை வழங்கியிருந்தன.
பதிவுகள் என்பது ஓகஸ்ட் 15ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், CODEFEST போட்டிகளின் மாபெரும் இறுதிப் போட்டி ஒக்டோபர் 24ஆம் திகதி SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. விண்ணப்பப்படிவங்களை http:/www.codefest.lk/ எனும் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பதாரிகள் தமது படிவங்களை பூர்த்தி செய்து, CODEFEST 2014 இணைப்பாளர் பிரசன்ன எஸ். ஹெதெல்ல அவர்களுக்கு கிடைக்கும் வகையில் தபால் (Faculty of Computing at SLIIT - New Kandy Road, Malabe) மூலம் அல்லது மின்னஞ்சல் (codefest@sliit.lk) மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
