Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 12 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஒன்லைன் பயண ஒழுங்குபடுத்தல் நிறுவனமான findmyfare.comக்கு, அண்மையில் நடைபெற்ற SLT Zero One விருதுகள் வழங்கும் நிகழ்வில், “Travel and Leisure” பிரிவில் “Best Website” மற்றும் “Best Digital Enabled Product” ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தினால் வழங்கப்படும் பிரயாணத்துடன் தொடர்புடைய தீர்வுகள் ஒன்லைனில் பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளமை காரணமாக SLT Zero One விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, findmyfare.com இணையத்தளம் தற்போது தினசரி பெருமளவானோரால் பார்வையிடப்படுகிறது.
பார்வையாளர்களை கவரும் வகையிலான பெருமளவு உள்ளம்சங்களையும் கொண்டுள்ளது. அத்துடன், findmyfare.comஇனால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் தீர்வுகள் ஆகியன “Best Digital Enabled Product” விருதுக்குரிய தகைமையை பெற்றிருந்தது.
2016 செப்டெம்பர் 27ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட, SLT Zero One விருதுகள், டிஜிட்டல் துறையில் காணப்படும் புத்தாக்கமான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் மூலமாக, திறமை வாய்ந்த டிஜிட்டல் துறையை சேர்ந்த ஆர்வலர்களுக்கு பொருத்தமான கௌரவிப்பையும், ஊக்குவிப்பையும் வழங்குவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. தேசத்துக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த விருதுகள் பற்றிய மேலதிக விவரங்களை www.01awards.lk பெற்றுக்கொள்ளலாம்.
findmyfare.comஇன் பணிப்பாளர் அபிஷேக் சித்தம்பலம் இந்த விருதை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குறிப்பிடுகையில்,
“findmyfare.comஐச் சேர்ந்த நாம், எமது சிறந்த செயற்பாடுகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளோம்.
குறிப்பாக எமது இணையத்தளம் மற்றும் அதில் அடங்கியுள்ள அம்சங்களுக்கு இந்த கௌரவிப்பு கிடைத்துள்ளது. நாம் முன்னெடுக்கும் பல புத்தாக்கமான செயற்பாடுகளில் ஓர் அங்கமாக மட்டுமே இது அமைந்துள்ள நிலையில், இணையத்தளத்தில் எமது அணியினர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம்” என்றார்.
4 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago