
SLIITஇன் கேமிங் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஏற்பாட்டில் GAMEFEST '14 நிகழ்வு அண்மையில் மாலபே கம்பஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது பல்கலைக்கழகங்களுக்கிடையிலான E-Sports போட்டித் தொடராக அமைந்திருந்ததுடன், பிரபல்யமான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை ஆகிய இரு பிரிவுகளில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நான்கு பிரபல்யம் பெற்ற கணனி விளையாட்டுக்கள் இதன் போது விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் Call of Duty 4, Need for Speed Most Wanted, League of Legends மற்றும் Defense of the Ancients (DOTA 2) ஆகிய உள்ளடங்கியிருந்தன.
இந்த விளையாட்டு போட்டிகளை கணனி பிரிவின் பீடாதிபதி கலாநிதி மாலித விஜேசுந்தர மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி நுவன் கோதாகொட ஆகியோர் தலைமைத்துவமேற்று முன்னெடுத்திருந்ததுடன், இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், தலைவருமான பேராசிரியர் லலித் கமகே கலந்து கொண்டிருந்தார்.
புங்குபற்றியிருந்த பாடசாலை மாணவர்களுக்கென பிரத்தியேக பயிற்சி செயற்திட்டமொன்றை Zone 24/7 Pvt Ltd நிறுவனம் முன்னெடுத்திருந்தது.