2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

Huawei மற்றும் சிங்கர் இணைந்து அறிமுகம் செய்யும் Honor 3C

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகளாவிய ரீதியில் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் Huawei வர்த்தக நாமத்தின், உள்நாட்டு நிறுவனமான ஹுவாவே டெக்னொலஜிஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட் மற்றும் Huawei வர்த்தக நாம ஸ்மார்ட்ஃபோன் வகைகளை இலங்கையில் விநியோகிக்கும், இலங்கையின் முதல்தர வர்த்தகநாமமும், ஸ்மார்ட்ஃபோன் விநியோகத்தருமான சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி ஆகியன இணைந்து மத்தியளவு ஸ்மார்ட்ஃபோன் வகைகளை இலங்கையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளன. Huawei இன் Honor 3C, Ascend Y600, Ascend G730, Ascend G6 மற்றும் Media Pad Youth ஆகியன இவ்வாறு உத்தியோகபூர்மாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் ஹுவாவே டெக்னொலஜிஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி டானியல் சன், சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ், ஹுவாவே டெக்னொலஜிஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்டின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுன் சாங் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது பிரபல R&B மற்றும் hip hop கலைஞரும் இசை கலைஞருமான இராஜ் வீரரத்ன, இலங்கையின் முதலாவது ஒன்லைன் வர்த்தக நாம தூதுவராக Huawei ஸ்மார்ட்ஃபோன் வகைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் உத்தியோகபூர்வமாக Huawei Honor 3 ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை பெற்றுக் கொண்ட பெருமையையும் இராஜ் தன்வசம் கொண்டுள்ளார்.

Huawei Honor 3C என்பது, அறிமுகம் செய்யப்பட்ட 36 மணிநேர காலப்பகுதியினுள் 1.5 மில்லியனுக்கும் அதிகமான முற்பதிவுகளை பதிவு செய்துள்ளன. முன்கூட்டிய ஓடர் செய்யும் காலப்பகுதியில் ஆசிய பிராந்தியத்திலிருந்து மட்டும் சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான ஓடர்களை பெற்றுள்ளன. மேலும், Huawei's Ascend Y600, Ascend G730, Ascend G6 மற்றும் Media Pad Youth Android Tablet போன்றனவும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு, இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஹுவாவே டெக்னொலஜிஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி டானியல் சன் இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் வகைகளின் அறிமுகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'Honor 3 மற்றும் ஏனைய புதிய கையடக்க தொலைபேசி வகைகளின் அறிமுகத்தின் மூலம், இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் புதிய திருப்பம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையின் முன்னோடி எனும ;வகையிலும், இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையின் இரண்டாம் நிலையாளர் எனும் வகையிலும் இந்த புதிய தொழில்நுட்பத்திலமைந்த கையடக்க தொலைபேசிகளை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வேகமாக வளர்ந்து செல்லும் துறையாக இந்த ஸ்மார்ட்ஃபோன் துறை அமைந்துள்ளது' என்றார்.

சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'சர்வதேச தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழும் Huawei உடன் இணைந்து இலங்கையின் முதல்தர இலத்திரனியல் சாதன விற்பனையாளரான சிங்கர் நுகர்வோருக்கு சிறந்த அனுபவத்தையும், உயர் ரகமான சாதனங்களையும் வழங்கி வருகின்றன' என்றார்,

Huawei Honor 3C நவீன பாணியிலும், உயர் வினைத்திறன் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. Honor இன் சக்தி வாய்ந்த உள்ளம்சங்கள் என்பது பாவனையாளர்களுக்கு தமக்கு விரும்பின உள்ளடக்கங்களை அணுக வழியமைப்பதுடன், நண்பர்களுடன் முன்னொருபோதுமில்லாத வகையில் விரைவாக தொடர்பில் இருக்கவும் உதவியாக அமைந்துள்ளது. கண்கவர், இலகுவான நிறையை கொண்டதும், கையடக்கமான வடிவமைப்பு போன்றவற்றுடன் அமைந்த Honor 3C கையடக்க தொலைபேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரு தினங்கள் வரை 20 வீதம் வரை கழிவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். சகல விதமான கையடக்க தொலைபேசி மாதிரிகளையும் நாட்டின் பாரிய விற்பனை தொடரான சிங்கர் இலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ள்ட் ஸ்ரோர்ஸ் ஆகிய 400க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் உள்ளடங்கியுள்ளன. மேலும் நாடு முழுவதையும் உள்ளடக்கி 1200க்;கும் மேற்பட்ட டிஜிட்டல் ஊடக விற்பனை பகுதிகளை கொண்ட சிங்கரின் டிஜிட்டல் ஊடகத்தின் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X