
Huawei தனது புதிய தயாரிப்பான Ascend Mate7 ஐ பேர்லின் நகரில் அறிமுகம் செய்துள்ளது. 6 அங்குல திரையுடன், FHD display கொண்டுள்ளதுடன், மெல்லிய 7.9mm பருமனையும் கொண்டுள்ளது. அதிகளவு வினைத்திறன் வாய்ந்த ஒக்டா-கோர் புரொசசர் கொண்டமைந்துள்ளது. பற்றரியின் கொள்ளளவு 4100 mAh ஆக அமைந்துள்ளது. fingerprint மற்றும் EMUI 3.0 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. Huawei அறிமுகம் செய்துள்ள மிகப்பிந்திய ஸ்மார்ட்ஃபோன் வகையாக Ascend Mate7 காணப்படுகிறது.
Huawei நுகர்வோர் வியாபார குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர் யு கருத்து தெரிவிக்கையில், 'எமது வேகமான மற்றும் மிகவும் பெரிய திரையை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் அனுபவம் என்பது நுகர்வோருக்கு ஒப்பிடமுடியாத அனுபவமாக அமைந்துள்ளது. சகல பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கு எமது உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை அனுபவிப்பதற்கான எமது அர்ப்பணிப்பின் அடையாளமாக அமைந்துள்ளது. Huawei Ascend Mate7 என்பது மிகப்பெரிய திரையையும், நுணுக்கமான வினைத்திறனையும் கொண்டுள்ளதுடன், அதிகளவு வினைத்திறன் வாய்ந்ததாகவும் உள்ளது. ஒற்றை தொடுகை fingerprint தொழில்நுட்பத்தின் காரணமாக, மிகவும் வசதிகரமானதாக அமைந்துள்ளது.