2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

iDove நேரடி மற்றும் இணையவழி சர்வதேச இளைஞர் மாநாடு

S.Sekar   / 2023 ஜனவரி 18 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமாதானம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கான, சமயங்களுக்கிடையேயான பரிமாற்றங்களும் சமயங்களுக்கிடையேயான கருத்தாடலும் இலங்கையில் iDove நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகக் அமைந்திருந்தன. ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இளைஞர் தலைமைத்துவத்தையும் ஆக்கபூர்வ வழிமுறைகளையும் ஊக்குவித்த இந்த செயன்முறையில் நாடு முழுவதிலும் உள்ள 300 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர். 'மதம் மற்றும் இனக்குழுமம் அல்லது இனம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒருவருடன் ஒருவர் உறவாடும்போது மாத்திரமே நாம் எமது மனிதாபிமானத்தைத் தழுவிக்கொள்கிறோம்' என iDove இளைஞர் தூதுவர் ஒருவர் இதன்போது கருத்துரைத்தார். iDove நேரடி மற்றும் இணையவழி சர்வதேச இளைஞர் மாநாட்டுக்காக நீர்கொழும்பிலுள்ள கோல்டி சாண்ட்ஸ் ஹோட்டலில் சுமார் 80 இளைஞர் மற்றும் சிவில் சமூக பங்குதாரர்களுடன் ஒன்றுகூடிய போது அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

இலங்கையில் 23 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும், அதேபோன்று iDove உலகளாவிய வலையமைப்பில் அங்கம் வகிக்கும் உகண்டா, பிலிப்பைன்ஸ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களும், தாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்காகவும் இந்த முக்கிய பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இரண்டு நாட்கள் ஒன்றுகூடியிருந்தனர். Power of Play> ரவிபந்து வித்யாபதியின் கலைஞர் குழு மற்றும் Naach Colombo ஆகியோரின் விருந்தினர் நிகழ்ச்சிகளுடன் சேர்த்து, சிக்கலான தலைப்புக்களை மத்தியஸ்தம் செய்து பொதுவான தளமொன்றைக் கண்டறிவதற்கான ஒரு மூலோபாயமாகவுள்ள படைப்பாக்கக் கலைகளும் மாநாட்டின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.

மாநாட்டின் விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஓலாப் மல்சோவ் உரையாற்றுகையில், குறிப்பாக உலகளாவிய மோதல்கள் உலகம் பூராகவும் அதிகரித்து வந்தமையால் மாற்றத்திற்கான இளைஞர் முன்னெடுப்புக்களின் தேவை உணரப்படுகின்றது என்பதை வலியுறுத்திக் கூறினார். இளைஞர்கள் எவ்வாறு அடிக்கடி குறைத்து மதிப்பிடப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனர் என்பது பற்றிக் குறிப்பிட்ட அவர், iDove ஆனது தகவல்களை அறிந்துகொள்ளல், செயலூக்கத்துடன் ஈடுபடுதல், கற்றுக்கொண்ட பாடங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ளல் மற்றும் மாற்றத்துக்காக ஒருவருக்கொருவர் கொடுக்கின்ற குரலை அதிகரித்தல் என்பவற்றுக்கான ஆற்றலை அந்த இளைஞர்களுக்கு வழங்கியது எனவும் கூறினார்.

வன்முறைசார் தீவிரவாத (iDove) அணுகுமுறை பற்றிய சமயங்களுக்கிடையேயான கருத்தாடல் 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தங்களுடைய சமூகங்களில் சமயங்களுக்கிடையேயான மற்றும் கலாசார ரீதியான விழுமியங்களையும் புரிதலையும் மேம்படுத்துவதற்கு இளைஞர்களை வலுவூட்டுவதே இக்கருத்தாடலின் நோக்கமாகும். iDove ஆனது சமூகத்தில் சமயங்களுக்கு இடையேயான சகவாழ்வுக்கும் ஒற்றுமைக்குமான மாற்றத்தின் முகவர்களை உருவாக்கும் பொருட்டு, கருத்தாடல் மற்றும் மென்திறன்கள் என்பவற்றைப் பயன்படுத்தி புத்தாக்கமுள்ள இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட இடையீடுகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன், African Union Commission’s Directorate of Citizens and Diaspora Organizations (AUC-CIDO) மற்றும் Deutsche Geselleschaft für Internationale Zussamenarbeit (GIZ) ஆகிய நிறுவனங்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதும், ஜேர்மன் பெடரலின் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சால் நியமிக்கப்பட்டதுமாகும். இலங்கையில் இந்த நிகழ்ச்சித்திட்டமானது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் (NAFSO), தேசிய சமாதானப் பேரவை (NPC) மற்றும் விழுது ஆகிய மூன்று சிவில் சமூக அமைப்புக்களின் பங்காண்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .