.jpg)
கண்டி நகரில் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக 'Kandy Speed @ Night 2014” போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டிகள் ஜுன் மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தகுதிகாண் சுற்று ஜுன் மாதம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் கார் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டு 'Kandy Speed @ Night' போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து வருடாவருடம் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மோட்டார் விளையாட்டு ஆர்வலர்களை கவரும் வகையில் இந்த போட்டிகள் அமைந்திருந்ததுடன், பல முன்னணி பிரபல்யமான வீரர்கள் இந்த போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
இந்த வீரர்களின் ஆளுமைகள் மற்றும் திறமைகளை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பு பாதுகாப்பான முறையில் பொது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டு இடம்பெறும் திடலைச் சூழ்ந்த பகுதிகளில் இந்த பார்வையாளர் பகுதிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த வருடாந்த நிகழ்வு இரண்டு ஆண்டுகளில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளதுடன், பிரபல்யமடைந்தும் காணப்படுகிறது. கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டிகளில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த போட்டிகளை பார்வையிட குழுமியிருந்தனர், இந்த ஆண்டில் கடந்த ஆண்டை விட அதிகளவானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
'Kandy Speed @ Night 2014”' என்பது விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது.
மோட்டார் பந்தயத்தை நாட்டின் சகல பாகங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டியது என்பது எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். மத்திய அமைவிடம் மற்றும் சிறப்பான வசதிகள் ஆகியவற்றின் உதவியுடன், கண்டி நகரம் மோட்டார் விளையாட்டு போட்டிகளை முன்னெடுக்க சிறந்த பகுதியாக அமைந்துள்ளது. சாரதிகளுக்கும், வீரர்களுக்கும் இது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்திருப்பதுடன், ஓடுகளமும் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.
கண்டியின் கீர்த்தி நாமத்துக்கு இந்த நிகழ்வு என்பது மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கும். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளும் சிறந்த நிகழ்வொன்றை பார்வையிட்ட அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
கண்டி இரவு மோட்டார் பந்தயம் என்பது கண்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்து, பொலிஸ் குடியிருப்பு பகுதி, போகம்பர சிறைச்சாலை மற்றும் கண்டி தீயணைப்பு பிரிவு ஆகியவற்றை கடந்து மத்திய சந்தைப்பகுதியூடாக டொரிங்டன் மற்றும் பூங்காவின் பின்பகுதியூடான நிறைவிடத்தை வந்தடையும். இது மொத்தமாக 1.1 கிலோமீற்றராகும்.
இந்த ஆண்டின் கண்டி இரவு நேர மோட்டார் பந்தயம் என்பது பல மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்வுகளை கொண்டிருக்கும். மோட்டார் கார் நிகழ்வுகளில் SL-GT 3500cc வரை, SL-S 1500cc வரை, Formula 1300, SL-H 1600cc வரை, SL-A Mini 7, SL-N Ford Lazer / Mazda 323 1300cc, SL-N Ford Lazer / Mazda 323 1500cc, SL-N 1000cc வரை, SL – S 1350 cc வரை, Subaru Legacy 2200cc வரை மற்றும் SL-A 1050cc வரை ஆகியன இடம்பெறவுள்ளன. மோட்டார் சைக்கிள் போட்டிகளில் குழு ‘O’ Standard Motorcycles 100cc க்கு மேற்பட்ட 125cc வரையான (4 Stroke - Mono Cylinder), குழு ‘M’ – Standard / Modified Motorcycles 100cc க்கு மேற்பட்ட 125cc வரையான (2 2 Stroke), 175ccக்கு மேற்பட்ட 250cc வரையான (4 Stroke), 600cc (4 Stroke) மற்றும் Standard Modified Motorcycles over 900ccக்கு மேற்பட்ட 1000cc வரையான, குழு '‘SUPER SM’ – Supermoto / Supermotard உடனான Supermotard Motorcycles 450cc வரையான மற்றும் குழு R - Thoroughbred Racing Motorcycles 125cc வரை ஆகியன உள்ளடங்கியுள்ளன.