2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'Masterclass' நிகழ்வு

A.P.Mathan   / 2014 மே 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் Colombo Academy of Hospitality Management (CAHM) பிரிவு, விருது வென்ற சமையல்கலை நிபுணரான பீட்டர் குருவிட்ட உடன் இணைந்து 'Masterclass' நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அவுஸ்திரேலியாவின் சிறந்த உற்;பத்திகளை கையாளும் விதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த 'Masterclass' நிகழ்வின் பிரதான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை சமையல் கலை சம்மேளனத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தது. இலங்கையின் பிரதான சமையல்கலை நிபுணர்கள் பலரும் இந்த சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த 'Masterclass' நிகழ்வில் பங்கேற்றிருந்த சமையல் கலை நிபுணர்கள் கல்வியகத்தின் விருந்தோம்பல் நிர்வாகத்தில் உயர் டிப்ளோமா கற்கைகளை தொடரும் மாணவர்களையும் இணைத்து, பீட்டர் குருவிட்ட அவர்களின் சமையல் செய்முறையை பின்பற்றி உணவு வகைகளை தயாரித்திருந்தனர்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் Colombo Academy of Hospitality Management (CAHM) பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் பிரெடி-மைல்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'தற்போது 'Masterclass' நிகழ்வை ஏற்பாடு செய்வதையிட்டு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் Colombo Academy of Hospitality Management (CAHM) பிரிவைச் சேர்ந்த நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். பீட்டர் தனது அறிவை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், மாணவர்களுக்கு தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதற்கான தூண்டுதலாகவும் அமைந்துள்ளார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்த கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரிகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் கௌரவிக்கிறோம். அது போலவே இலங்கை சமையல் கலை சம்மேளனத்திடமிருந்தும் எமக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது' என்றார். 

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் Colombo Academy of Hospitality Management (CAHM) பிரிவின் சமையல் கலை நிபுணர்களில் ஒருவரான கபில ஜயநெத்தி கருத்து தெரிவிக்கையில், 'எந்த வித சந்தேகங்களும் இன்றி, சமையல் கலை நிபுணரான பீட்டர் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த 'Masterclass' நிகழ்வு என்பது இலங்கையில் இதுவரையில் ஏற்பாடு செய்யப்பட்டிராத சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க பீட்டரை வரவேற்பதில் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் Colombo Academy of Hospitality Management (CAHM) பிரிவைச் சேர்ந்த நாம் பெரும் மகிழ்ச்சியடைவோம்' என்றார்.

Colombo Academy of Hospitality Management (CAHM) கல்வியகத்தின் திறந்த நாள் நிகழ்வு எதிர்வரும் ஜுன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களை www.cahm.lk எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X