2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

NCE விருது வழங்கும் நிகழ்வில் மஞ்சி வர்த்தகநாமத்திற்கு தங்க விருது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் (NCE)  வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக சிலோன் பிஸ்கட் லிமிடெட் (CBL) நிறுவனம், உணவு மற்றும் பானங்கள் துணைப் பிரிவின் கீழ் 'ஆண்டிற்கான மிகச்சிறந்த ஏற்றுமதியாளர்' தங்க விருதினை வென்றுள்ளது.
 
இவ் விருதினை சிபிஎல் நிறுவனத்தின் சார்பாக நிதிப் பிரிவின் குழும பணிப்பாளர் நிலாம் ஜயசிங்க மற்றும் உதவி ஏற்றுமதி முகாமையாளர் பிரியந்த பண்டார ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவ் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த ஏற்றுமதி செயற்பாடுகள் அங்கீகரிக்கப்படுவதுடன், நேர்மறையான தலைமுறை மதிப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு போன்றனவும் கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல், NCE விருது வழங்கும் நிகழ்வில் CBL நிறுவனம் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
 
இந் நிகழ்வின் நடுவர் குழு மூலம் தனிசிறப்பு வாய்ந்த ஏற்றுமதி செயல்பாடுகள் மாத்திரம் கருத்தில் கொள்ளப்படாது, சந்தை மற்றும் உற்பத்தி அபிவிருத்தி, மேலதிக மதிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் மூலதனம் சார்ந்த சிறந்த நிர்வாகம், வர்த்தகநாம சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியன குறித்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. 
 
தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருந்தும் வகையிலான தயாரிப்புகளை வழங்கியதன் காரணமாகவே CBL இவ் விருதினை வென்றுள்ளது. இதன் காரணமாகவே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எமது தயாரிப்புக்களுக்கு சிறந்த கேள்வி நிலவுகிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளும் மிக முக்கியம் என்பதனால், ஆண்டுதோறும் நடைபெறும் உணவு மற்றும் பானங்கள் துறை சார்ந்த சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் நாம் பங்கேற்று ஆதாயம் தரக்கூடிய சர்வதேச சந்தைகள் குறித்து அடையாளம் கண்டுவருகிறோம். இதன் மூலம் எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சுவை ஆகியவற்றை இனங்கண்டு கொள்ள முடிந்துள்ளது. குழுச் செயற்பாடுகளும் அத்தியாவசியமாகும்' என ஏற்றுமதி பிரிவின் பொது முகாமையாளர் ஜுட் ருபேரா தெரிவித்தார்.
 
இதற்கு மேலதிகமாக, CBL ஆனது தொடர்ச்சியாக மூன்று நிகழ்வுகளில் ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ளது. ஏற்றுமதி செயற்பாடுகளுக்காக ஏற்றுமதியாளர் ஒருவர் பெறக்கூடிய அதியுயர் விருதாக இவ் விருது கருதப்படுகிறது. 
 
பிஸ்கட் வகைகளுக்கான அதிகரித்து செல்லும் ஏற்றுமதி கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில், சிபிஎல் நிறுவனமானது அண்மையில் அவிசாவளை ஏற்றுமதி வர்த்தக வலயத்தில் பிஸ்கட் ஏற்றுமதிகளுக்கான பிரத்தியேக தொழிற்சாலையை நிர்மாணித்திருந்தது. இலங்கையின் பிஸ்கட் உற்பத்தி செய்யும் நிறுவனம், ஏற்றுமதியாளர்களுக்கான பிரத்தியேகமான தொழிற்சாலையினை ஸ்தாபித்தது இதுவே முதற் தடவையாகும். இப் புதிய தொழிற்சாலையின் செயற்பாடுகள் மூலம் வெளிநாட்டு வருமானம் கிடைப்பதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தும் வகையில் புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .